Monday 5 January 2015

தாய்

தாய் ஈரெழுத்து திருக்குறள் ,

ஒரு சொல் காவியம் ,

" அம்மா " என்ற சொல் உயிரெழுத்தில் தொடங்கி , மெய்யை மையப்படுத்தி , உயிர்மெய்யில் முடியும் உன்னதம் கொண்ட சொல் மட்டுமில்லை , நமது ஜீவனின் ஆத்மார்த்தம் .

ஒவ்வொரு தாயும் தன் குழந்தையைக் கருவறையில் சுமப்பது ஒன்பது மாதம் . மனஅறையில் சுமப்பதென்பதோ காலம் முழுவதும் .

இன்றும் நமக்கு அந்தச் சொல்லை நினைக்கும் போதே கண்களில் கண்ணீர் திரளும். தாயுடன் நமது சின்னவயது ஞாபகங்களை நினைக்கும் போது , அந்த ஞாபகங்கள் அலைகளைப் போல் மோதி நம் மனம் நனைக்கும் .

தன்னை உருக்கிக் கொண்டு நம்மை உயர்த்துவதற்காக , பொருமையையும் , வலிகளையும், மகிழ்ச்சியாக உருமாற்றிக் கொள்ளும் திறமை "தாய்க்கு" மட்டுமே உண்டு .

அப்படி நமக்கான கடவுளாக இப்பூமியில் அவதரித்த அன்னையான நமது " தாய் " க்கு நம்முடைய முதல் வணக்கத்தை ( பதிவுச் செய்வோம்  ) தெரிவிப்போம் ,...

No comments:

Post a Comment