Friday, 1 June 2018

இயற்கையின் பிரிவால்

பஞ்சு மெத்தையென
புல்வெளியில்
என் பாதம்
தழுவி நின்ற
அந்தப் பனித்துளிகள்
என்னில்
கானல் நீராக...

தீண்டும் வெயிலையும்
மறைத்து.
என் தேகம் குளிர்வித்த
அந்த நிழல் தரும்
மரக்கூட்டம்
என்னில்
கானல் நீராக.....

காலை வேளையிலும்,
மாலை வேளையிலும்
இன்னிசை கச்சேரியால்
கீச்சலிட்டுக் கொண்டிருக்கும்
பறவை கூட்டம்
என்னில்
கானல் நீராக,,,,

விடுமுறை இல்லாத
தினத்தில் கூட
நண்பர்களுடன், மீன்களுக்கு போட்டியாக
துள்ளிக் குதித்த
குளக்கரைகள்
என்னில்
கானல் நீராக....

பரந்த வயல் பகுதிகளில்
அறுவடை முடித்து
குவித்து வைக்கப்பட்டிருக்கும்
வைக்கோல் குவியல்களில்
சறுக்கி விளையான்ட
நாட்கள்
என்னில்
கானல் நீராக.....

இயற்கையோடு இருந்து,
ஆரோக்கியமாக
வாழ்ந்த நாட்கள்
என்னில்
கானல் நீராக
மாறிய
தருணத்தில்,,,,,

செயற்கையில்
வாழ்ந்து, அற்பத்தில்
மரணிப்பது மட்டும்
தற்போது
என்னில்
நிஜமாக....

அன்புடன்
மேலூர் ராஜா....

Thursday, 10 May 2018

மௌனம்

விழிகள்
சில
நேரம் மௌனமாகட்டும்.....

நீ
என்னை
கடந்துச் செல்லும் ..

அந்த
ஒரு நொடி
பொழுதேனும்.....

Wednesday, 9 May 2018

தனிமை ....

உன்
மௌன
வார்த்தைகளால்.....

ஆயிரம்
அர்த்தங்கள் உணர்ந்தேன்,,,,

உன்
தனிமை பார்வையில்...
மீண்டும்
ஆயிரம் அர்த்தங்கள் உணர்ந்தேன்.....

இப்போது
நீ தந்த
தனிமையில் .....

ஒற்றை
அர்த்தம் மட்டும்
உணர்கின்றேன்.....

உன்
நினைவுகள்
உன்னைப் போல்
தனித்துவிட்டுச்
செல்லாது என்றே,....

அன்புடன்
மேலூர் ராஜா....

வாழ்க்கை

வலிகள் நிறைந்த
வாழ்க்கையை
வாழ
கற்றுக்கொடுத்துவிட்டாய்....

புன்னகையோடு
நீ
பேசிய தருணங்கள்....

இப்பொழுது
நினைவுகளாக என்னுள்,,...

நீ
அளித்த
செல்லக் குட்டல்கள்,,,,

இப்பொழுது
நினைவுகளான என்னுள்.....

நீ
அளித்த
சில நொடி மௌனம் ....

இப்பொழுது
என்னுள் நினைவுகளாக,,,,

உன்னைவிட்டு
ஒரு
நொடிக்கூட
பிரிய மாட்டேன் என
நீ கூறிய
வார்த்தைகள் மட்டும் ....

இப்பொழுதும்
என்னுள் நிஜங்களாக ....

உன்
நினைவுகளால்
ஒரு நொடிக் கூட
என்னை விட்டு
பிரியாமல்
நீ
இருப்பதால் .....

அன்புடன்
மேலூர் ராஜா.....

Monday, 7 May 2018

கனவில் உன்னுடன்

சில நேரம்
விடியல்
இல்லாமலேயே
போகட்டும் ....

நீ
என்னுடன்
இல்லை என்பதை
மறந்து .....

உன்னிடம்
பேசிக்கொண்டிருப்பதால்
கனவில்,.,.....

அன்புடன்
மேலூர் ராஜா

மீண்டும் நிகழ வேண்டும் ..

தாயின்
கருவறையில்
உதிர்த்த நான்.....

உன்
விழிப்பார்வை
கிடைக்க வேண்டியே.
பிறப்பெடுத்தேன்.....

கரம் பற்றியே
நெடுந்தூரச் சாலையில்
பயணம் எதுவென்று
தெரியாமல் பயணித்தோம்....

இப்பொழுது
என் நிழல் மட்டுமே
என்னுடன் ....

பற்றிக் கொண்டுச்சென்ற
கரங்கள் வேண்டுமானால்
தனித்துவிட்டுச்
சென்றிருக்கலாம்,,...

ஆனால்
நினைவுகள் இல்லை.....
அது
எப்பொழுதும்
என்னுடனையே...
வழித் துணையாக,,...

மரணிக்கும் முன்
மீண்டுமொருமுறை
நிகழ வேண்டும் .....

உன் மடி
நான் சாய்ந்து
உன்
கரங்கள்
மீண்டுமொருமுறை
என்
தலைமுடியினை கோதிவிட வேண்டும்......

அன்புடன்
மேலூர் ராஜா...

Friday, 4 May 2018

பேசிய நினைவுகள்

உனது
இதழ்கள்
விரித்துடும்
ஒவ்வொரு மணித்துளியும்....

என்னூள்
ஆயிரம்,ஆயிரம்
உயிரோட்டம்
நிகழ்த்தியிருக்கின்றது....

உன்னோடு
பேசிக் கொண்டிருந்த தருணத்தில்
நேரம்
பல கடந்துச் சென்றதும் ...

நன்மைக்கே
என,
இப்போது
உணர்த்தி விட்டாய்....

உன்னுடன் ஆன
நினைவுகளை
நான்
சுமந்திருக்கும் ...

இந்த
தருணங்கள் கூட
நினைவுகளால்
நான் ஆறுதல்
அடைய.....

அன்புடன்
மேலூர் ராஜா.,,,,

உனது பிரிவு

நீ,...
மௌனம் மூலம்
அறிமுகமான பொழுது
எனக்கு தெரியவில்லை ....

எனது
வாழ்க்கையும்
மௌனமாகும் என்று.....

நம்
காதல்
பயணத்தில்,....

ஆண்டுகள் பல
கடந்திருந்தாலும்....

இரண்டு, மூன்று
முறையேனும் மட்டுமே
முகம்
அறிந்து பேசியிருப்போம்.....

ஆனாலும்
ஒரு நொடி பொழுதேனும்
பேசாமல் இருந்ததில்லை....

நீண்ட
மௌனங்கள் ....
உன்னிடம்
நான் பெற்றப்பொழுதெல்லாம்
காதல் மட்டுமே

நம்முடன்
அதிகரித்துக் கொண்டிருந்தது....

ஆனால்
இப்பொழுது இருக்கும் மௌனம் ......

என்னிடம் மட்டும்
நம்
காதல் நினைவுகளோடு.....

அன்புடன்
மேலூர் ராஜா....

அக்கினி வெயிலின் தாக்கம்

உனது வருகையால்
எனது,
நிழல் கூட
என்னை விட்டு மறைந்து விடுகின்றது ....

மண்
குளிர வேண்டிய
வேளையில் ...

உனது
வருகையால்..
நான் குளித்துக் கொண்டிருக்கின்றேன்,
வியர்வையின் மூலம் ....

போதும்
உன் தண்டனை
இயற்கையை அழித்தமைக்கு
நீ
பார்க்கும் கோரப்பார்வை....

ஆறு, குளம்
வறண்ட நிலைமை...
இப்போது
என்னுள்ளும் எழுகின்றதே....

மறைந்து விடு
கதிரவனே ....
எங்கள்
வளம் செழிக்க
மழை மேகத்தினை
அனுப்பிவிட்டு .....

அக்கினி வெயிலின் தாக்கத்தால்..

அன்புடன்
மேலூர் ராஜா..

Sunday, 31 January 2016

சித்தர்களின் எந்திரம் ......

திரு மூலர் அருளிய திருஅம்பலச் சக்கரம்...

சித்தர்களின் எந்திரம் ...

கருவூராரின் ஐங்கோண யந்திரம்

சித்தர்களின் மகா எந்திரம்

திருமூலர் சொல்லும் தம்பனச் சக்கரம் ,..

அன்போடு தொடருவோம் அறிந்துகொள்ள .,,. ( பகுதி 13 )

ஓம் என்ற ஒலியிலிருந்துதான் இந்த உலகம் தோன்றியது என்பார் திருமூலர்.

"ஓங்காரத் துள்ளே உதித்த ஐம் பூதங்கள்
ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம்
ஓங்காரத் தீதத்து உயிர் மூன்றும் உற்றன
ஓங்கார சீவ பரசிவ ரூபமே!"

பிரணவத்துள் தோன்றியதே இந்த உலகத்தின் பஞ்ச பூதங்கள், அவற்றில் விளைந்த மாற்றங்களில் அசையும் உயிர்களும், அசையா உயிர்களும் உண்டாயின.

இந்த உலகம் ஒலியின் வடிவம் என்பதை ஞானம் கைவரப் பெற்றவர்கள் அறிந்திருந்தனர். பல சப்தங்களின் பிரதிபலிப்பே உலகம் என்பார்கள் அவார்கள்.

ஒரு பேரொளி இந்த பிரபஞ்சத்தையே நிரப்பி இருக்கின்றது. உலகம் முழுதும் ஒளி, உலகமெங்கும் ஒலி. ஆனால் சில ஒளி களைத்தான் நம் கண்கள் பார்க்கின்றன. சில ஒலிகளைத்தான் நம் காதுகள் கேட்கின்றன.

அனால் ஒலிகளுக்கும் உருவம் உண்டு அதையும் பார்க்கலாம் என்கிறார்கள் சித்தர்கள். ஒலியைக் கேட்கமுடியும், அது எப்படி பார்ப்பது என்று யோசிக்கிறீர்களா?

மந்திரங்கள் ஒலிவடிவானவை. அந்த மந்திரங்களை கண்ணால் கண்ட சித்தர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள். ஆக, கண்ணால் ஒலியைக் காண்பது சாத்தியம் என்கிறார்கள் அவர்கள்.

நம்முடைய விருப்பங்களைத் தெரிவிக்கவும், நம்முடைய வேலைகளைக் குறித்தும் நாம் பேசுகின்றோம். இந்தப் பேச்சொலி நாம் வாய் திறந்து பேசும் முன் எங்கிருந்தது? மனதில் எண்ணமாக இருந்தது. அதற்க்கு முன் எப்படி இருந்தது?

அது எண்ணங்களும், நினைவுகளுமாக முதலில் சூட்சும சப்தமாக இருந்தது. அதன் பிறகே வாய் மூலம் வெளிப்பட்டது. இந்த சப்தங்களை நான்கு வகையாகப்பிரிப்பர். அவை,

1, வைகரி - செவியோசை.

2, மத்திமை - கருத்தோசை.

3, பைசந்தி - நினைவோசை.

4, பரை - நுண்ணோசை, என்பவை ஆகும்.

நம்முடைய ஒவ்வொரு எண்ணமும் சொல்லாக ஒலி வடிவம் பெறுவதற்க்கு முன் சூட்சும ஒலியாய் இருந்தவையே.அந்த சூட்சும ஒலியையே ஓம் என்கிறார்கள் சித்தர்கள்.

ஆக, ஓங்காரம் மூல சப்தம் எல்லாமந்திரங்களுக்கும், ஒலிகளுக்கும் அதுவே ஆதாரம் என்கிறார்கள் சித்தர்கள்.

இது பற்றிய மேலும் விபரமாக இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்..

அன்போடு தொடருவோம்
அறிந்துகொள்ள .... ( பகுதி  13 )

அன்போடு தொடருவோம் ... அறிந்துகொள்ள ,.. பகுதி 12

சித்தர்களின் யந்திரங்கள்...
ஒலிக்கும் உருவம் உண்டென உணர்ந்த சித்தர்கள், அந்த ஒலியின் மூலமான எழுத்துக்களின் அதிர்வையும், சக்தியையும் தங்களின் தேவைகளுக்கு பயன் படுத்தினர். ஒவ்வொரு எழுத்துக்கும் உண்டான அதிர்வை அல்லது சக்தியினை மற்ற எழுத்துக்களோடு சேர்க்கும் போது சக்தி உருவாக்கம் நடக்கிறது. இதை மந்திரம் என்றனர்.

எழுத்துக்கள் மந்திரங்களாக உருவாக்கும் போது அவை உயிர் பெற்று வருகின்றன. அவை தனது சக்தியால் சுற்றுப்புற சூழலிலும் மனிதர்களிலும் மாற்றங்களை உண்டாக்குகின்றன. ஓம், ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம் போன்ற மந்திரங்கள் முழு மனதுடன் உச்சரிக்கும் போது உடலில் உள்ள அவ்வளவு நரம்புகளிலும் ஒரு அதிர்வு உண்டாவதை அவதானிக்கலாம். இந்த மந்திரங்களை நாங்கள் உச்சரிக்காவிட்டாலும் அவற்றை எழுதிய ஓலை அல்லது தகடை அருகில் வைத்திருப்பதன் மூலம் ஒரு பாதுகாப்பும் நன்மையையும் உண்டாகும்.

எழுத்துக்களைப் போலவே எண்களுக்கும் சக்தி உள்ளது என்றும், எழுத்துக்களையும் எண்களையும் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் சக்கரமாக அமைத்து அதற்க்கு உண்டான குறிப்பிட்ட மந்திரத்தை குறிப்பிட்ட அளவில் ஜெபித்தால் அவை தொழிற்பட தொடங்கும் என்பதையும் சித்தர்கள் நன்கு அறிந்திருந்தனர்.

நவக்கிரகங்களின் கிரக சாரங்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளவும், தங்கள் இஷ்ட தெய்வங்களின் அருளை பெற்றுக் கொள்ளவும் , பில்லி சூனியம் , ஏவல் போன்றவற்றிலிருந்து தம்மைச் சூழ்ந்து உள்ளவர்களைக் காக்கவும் சித்தர்கள் எண்களையும் எழுத்துக்களையும் மாறி மாறி இட்டு சக்கரங்களை உருவாக்கினார்கள்.

அவற்றின் மூலம் தாங்கள் அடைந்த பலனையும் சக்கரங்கள் தயாரிக்கும் முறையையும் என்ன சக்கரத்திற்கு என்ன மந்திரம் எத்தனை தடவை சொல்லவேண்டு என்பதையும் அது என்ன என்ன வேலைகளைச் செய்யும் என்பதையும் தங்களின் பாடல்களில் தெளிவாகவே சொல்லிச் சென்றுள்ளனர்.

அவ்வாறு அருளப் பட்ட சில யந்திரங்களை எப்படித் தயாரிப்பது என்பது பற்றியும் இனி வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

அன்போடு தொடருவோம் .,.
       அறிந்துகொள்ள .....      பகுதி - 12
          

அருட் பெரு ஜோதி வள்ளலார் - மேலூர் ராஜா

வடலூர் சத்தியஞான சபையில் ஏழுதிரை நீக்கி ஜோதி தரிசனம்


வடலூர் சத்தியஞான சபையில் ஏழுதிரை நீக்கி ஜோதி தரிசனம்

கருப்புத்திரை இறையை மறைக்கிறது

நீலத்திரை உயிராகிய ஆன்மாவை மறைக்கிறது

பச்சைத்திரை பரவெளியை மறைக்கிறது

சிவப்புத்திரை சிதாகாசவெளியை மறைக்கிறது

பொன்மைத்திரை பரம்பொருள் உள்ள வெளியை மறைக்கிறது

வெண்மைத்திரை மெய்ப்பதியை மறைக்கிறது

கலப்புத்திரை இந்திரிய கரண அனுபவங்களை மறைக்கிறது
இப்படி தத்துவங்கள் 36 அவற்றின் தாத்துவிகங்கள் 60 சேர்த்து 96 அனுபவநிலைகளை மறைக்கும் திரைகளை நீக்கி ஆன்மப்பிரகாசத்தை அகத்தில் காணும் அனுபவமே ஏழுதிரை நீக்கிக் காட்டப்படும் வடலூர் ஜோதி தரிசனம்

உலகிலேயே வடலூரில் மட்டுமே காட்டப்படும் அற்புத நிகழ்ச்சி
அதிகாலை ஆறுமணிக்குக் காட்டப்படும் இந்த ஜோதியைக் காண வானுலக தேவர்கள் மற்றும் சித்தர்கள் வடலூர் பெருவெளியில் சூட்சும நிலையில் நின்று காண வருவதாக வள்ளலார் அன்பர்கள் கருதுவர்

வியாபாரம் சிறக்க மகாலட்சுமி மந்திரம்

வியாபாரம், தொழில் விருத்தி தரும் ஸ்ரீ லக்ஷ்மி மந்திரம் !!

வட இந்திய வியாபாரிகள் பின்பற்றும் ஒரு ரகசிய முறையை இங்கு தருகிறேன் .

படித்துப் பயன்பெறுங்கள்.தொழில்,வியாபார ஸ்தாபனங்களில் தினமும் விளக்கேற்றி இம்மந்திரம் ஜெபித்து வர தொழில் மற்றும் வியாபார விருத்தி ஏற்படும்.

மேலும்பணத்தைப் பெருக்கும் புத்திசாலித்தனம் உண்டாகும்.வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி அன்று பச்சைக்கற்பூரம்ஏலக்காய் கலந்து காய்ச்சிய பால்,வெற்றிலை,பாக்கு,பாயசம்,கற்கண்டு,பழங்கள் வைத்து வழிபட விரைவான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.விளக்கேற்றி "

ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மித் தாயே உன் முழு உருவோடும் சர்வ ஆபரணங்கள் பூண்ட கோலத்தோடும் இத்தீபத்தில் எழுந்தருளி எனக்கு வறுமை கடன் அற்ற வளமான வாழ்வு தந்தருள வேண்டும்"

என்று வேண்டி தீபத்தை வணங்கித் தலை மற்றும் கண்களில் ஒற்றிக்கொள்ளவும்.தீபம் அணைந்ததும் தீபத்திரியில் உள்ள கருக்கை நெற்றியில் இட்டுக் கொள்ளவும்.இது உயர்வான பலன்களைத் தரும்.மற்ற நாட்களில் முடிந்ததை நைவேத்யம் செய்து வழிபட்டு வாருங்கள். அல்லது கல்கண்டு மட்டும் படைக்கலாம்.

மந்திரம் :-

ஸ்ரீ சுக்ல மகாசுக்லே நவாங்கே ஸ்ரீ மஹாலக்ஷ்மி நமோ நமக

கோரக்கர் அருளிய சந்திரரேகை

நீண்ட தேடலுக்கு பின் குருவின் ஆசியால் என்னுடைய ஆன்மீக பயிலக ஸ்ரீ போகர் அறக்கட்டளை அண்ணன்  ஜீ மூலமாக கிடைக்கப் பெற்ற சித்தர் ஸ்ரீ கோரக்கர் அருளிய சந்திரரேகை....

Sunday, 27 December 2015

Melur

என்
பயணத்தில்
எப்பொழுதும் நீ
என் விழியின்
பார்வையாக ,,,,, !!!

Wednesday, 23 December 2015

கிறிஸ்துமஸ் குடில்

கிறிஸ்து பிறப்பை சித்தரிக்கும் வகையில் மேலூர் கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள குடில்

Monday, 21 December 2015

அன்போடு தொடருவோம், அறிந்துகொள்ள .... !! (பகுதி - 11)

🌺அன்போடு அனைவருக்கும் வணக்கம் ....!!  🙏

இயற்கை மூலம் அறிந்த இறைவனை, ஒலி மூலம் அறிய முற்பட்ட போது, ப்ரவ மந்திரமான ஓம் (அஉம்) தோன்றியது. இதன் மூலம் தன் உடலில் ஏற்படும் அற்புதத்தை உணர்ந்து. மீண்டும் மீண்டும் இயற்கையின் மூலமாக பலவிதமான ஒலிகளை அறிந்து அவற்றிக்கு வடிவம் (உச்சரிப்பு) அளித்து அதன் மூலம் . தான் உருவமாக வழிபாடு செய்துவரும் இறைவனை வழிபாடு செய்தனர்.

உதாரணமாக மந்திர ஒலிகளை ஆழ்ந்து கேட்டோம் என்றால் அவை அணைத்துமே , இயற்கையின் ஒலி அதிர்வுகளாகவே இருக்கும் .

அவ்வாறு வழிபாடு செய்யும் முறைகளை தான் பிற்காலத்தில் மந்திரம் என கூறியுள்ளார் .

இப்போது வேதத்தின் மூலத்தை அறிந்துகொள்வோம்..!

வேதம் ப்ரபஞ்சத்தின் அடையாளம் . விஞ்ஞானத்தின் வடிவம்.எதிர்கால முன்னோட்டத்தின் சாரம்.

 `வித்தை ஏதும் கல்லாதவன் என்னுள்ளே வேத நுட்பம் விளங்கிட செய்தனை`

நாம் அறிந்துள்ளவரை வேதம் நான்கு. இந்து மதத்திற்கு மட்டுமானது. உண்மை இதுவல்ல

 நாம் வழிபடுகின்ற, வணங்குகிற விக்கிரக தெய்வங்களை குறிக்கவே இல்லை.
அதாவது விஞ்ஞானத்திற்கு எது எது முக்கியமோ அந்த பஞ்ச பூதங்களை குறித்து தான் பேசுகிறது.சூரியன், வருணன், காற்று, மண், வெளி இவற்றை வணங்குகிறோம். எதற்கு? இந்த மனிதர்களுக்கு நலம் தரும் பொருட்டு உருவானதே வேதம்.

 நான்மறை என்பது நாமெல்லாம் பொதுவாக சொல்லுகிற வேதம். பைபிளுக்கும் பெயர் வேதம் தான். குரானுக்கும் பெயர் வேதம் தான்.திருக்குறளுக்கு பெயர் கூட வேதம் தான்.

இன்னும் அறிந்துகொள்ள ,...

அன்போடு தொடருவோம் , அறிந்துகொள்ள ....!!

இங்கே நான் எழுதப் போகின்றவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது கிடையாது.ஏன் என்றால் உங்கள் எண்ணங்கள் மாறுபடலாம், கர்மவினைகளால். என்னையும் சேர்த்தே ...✒

🌺அன்போடு தொடருவோம், அறிந்துகொள்ள ...,.🌺 (பகுதி - 11)