Friday, 30 January 2015

என் காத்திருப்பு

என்
மனதைப் போல்
இன்றும்
காத்துக்கொண்டிருக்கிறது
எனது இல்லமும்
மீண்டும் என்னூள்
நீ
வருவாய் என்று ,,,

காதலர்கள்

விலைமதிப்பில்லா
காதலையும்
விற்றுக்கொண்டிருகிறோம்
காதலர்களாக நாம்
நடித்துக் கொண்டிருப்பதால் ,,,

என் பேனா முனை

ஒவ்வொரு முறையும்
என் பேனாமுனை
மரணம் அடைகிறது
நீ
எனக்காகவே வாழ்கிறாய்
என்ற நினைவோடு
நான்
கவிதை எழுதுகையில் ,,,

Thursday, 29 January 2015

என் காதல் கவிதை

மீண்டும்
செல்லவே விரும்புகிறேன்
தாயின் கருவறைக்கு
பொய்யான
உன் காதலில்
மெய்யான நான்
இறந்துக் கொண்டிருப்பதால் ,,,

என் காதல் கவிதை

இவள்
என்னிடம் பேசிடும்
வார்த்தைகள் அனைத்தும்
பொய்யென தெரிந்தும்
ரசித்து சிரித்துக்
கொண்டிருகிறேன்
என் காதல் பொய்யில்லை
என்பதால்  ,,,

என் காதல் கவிதை

அரிதாரம்
இல்லாமலே
அழகாய் உன் நடிப்பு
என் காதலியாக ,,,,,

Wednesday, 28 January 2015

என் காதல் கவிதை

நாம்
பிரிந்திருந்தாலும்
உன்னூள் நான்
இன்றும்
இருப்பதை
உறுதி செய்கிறது
உன் கழுத்தில்
நம் திருமாங்கல்யம் ,,,