Sunday, 27 December 2015

Melur

என்
பயணத்தில்
எப்பொழுதும் நீ
என் விழியின்
பார்வையாக ,,,,, !!!

Wednesday, 23 December 2015

கிறிஸ்துமஸ் குடில்

கிறிஸ்து பிறப்பை சித்தரிக்கும் வகையில் மேலூர் கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள குடில்

Monday, 21 December 2015

அன்போடு தொடருவோம், அறிந்துகொள்ள .... !! (பகுதி - 11)

🌺அன்போடு அனைவருக்கும் வணக்கம் ....!!  🙏

இயற்கை மூலம் அறிந்த இறைவனை, ஒலி மூலம் அறிய முற்பட்ட போது, ப்ரவ மந்திரமான ஓம் (அஉம்) தோன்றியது. இதன் மூலம் தன் உடலில் ஏற்படும் அற்புதத்தை உணர்ந்து. மீண்டும் மீண்டும் இயற்கையின் மூலமாக பலவிதமான ஒலிகளை அறிந்து அவற்றிக்கு வடிவம் (உச்சரிப்பு) அளித்து அதன் மூலம் . தான் உருவமாக வழிபாடு செய்துவரும் இறைவனை வழிபாடு செய்தனர்.

உதாரணமாக மந்திர ஒலிகளை ஆழ்ந்து கேட்டோம் என்றால் அவை அணைத்துமே , இயற்கையின் ஒலி அதிர்வுகளாகவே இருக்கும் .

அவ்வாறு வழிபாடு செய்யும் முறைகளை தான் பிற்காலத்தில் மந்திரம் என கூறியுள்ளார் .

இப்போது வேதத்தின் மூலத்தை அறிந்துகொள்வோம்..!

வேதம் ப்ரபஞ்சத்தின் அடையாளம் . விஞ்ஞானத்தின் வடிவம்.எதிர்கால முன்னோட்டத்தின் சாரம்.

 `வித்தை ஏதும் கல்லாதவன் என்னுள்ளே வேத நுட்பம் விளங்கிட செய்தனை`

நாம் அறிந்துள்ளவரை வேதம் நான்கு. இந்து மதத்திற்கு மட்டுமானது. உண்மை இதுவல்ல

 நாம் வழிபடுகின்ற, வணங்குகிற விக்கிரக தெய்வங்களை குறிக்கவே இல்லை.
அதாவது விஞ்ஞானத்திற்கு எது எது முக்கியமோ அந்த பஞ்ச பூதங்களை குறித்து தான் பேசுகிறது.சூரியன், வருணன், காற்று, மண், வெளி இவற்றை வணங்குகிறோம். எதற்கு? இந்த மனிதர்களுக்கு நலம் தரும் பொருட்டு உருவானதே வேதம்.

 நான்மறை என்பது நாமெல்லாம் பொதுவாக சொல்லுகிற வேதம். பைபிளுக்கும் பெயர் வேதம் தான். குரானுக்கும் பெயர் வேதம் தான்.திருக்குறளுக்கு பெயர் கூட வேதம் தான்.

இன்னும் அறிந்துகொள்ள ,...

அன்போடு தொடருவோம் , அறிந்துகொள்ள ....!!

இங்கே நான் எழுதப் போகின்றவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது கிடையாது.ஏன் என்றால் உங்கள் எண்ணங்கள் மாறுபடலாம், கர்மவினைகளால். என்னையும் சேர்த்தே ...✒

🌺அன்போடு தொடருவோம், அறிந்துகொள்ள ...,.🌺 (பகுதி - 11)

Saturday, 19 December 2015

நினைவுகள் ,,. (பழைய கவிதைகளின் தொகுப்பு)

I am browsing [கிராமத்து தேவதை]. Have a look at it! http://kiraamathuthevathai.blogspot.in/search?updated-min=2012-01-01T00:00:00-08:00&updated-max=2013-01-01T00:00:00-08:00&max-results=20&m=0

அன்போடு தொடருவோம் , அறிந்துகொள்ள .... !! ( பகுதி - 10 )

அனைவருக்கும் அன்பான வணக்கம் ...!! 🙏

இறைவனுக்கு உருவ வழிபாடு எப்படி நிகழ்ந்தது என்று அறிந்தோம், இன்று மந்திரங்களும், வேதங்களும் எப்படி உருவானது என்று அறிந்துக்கொள்வோம்..

முதலில் மந்திரங்கள், வேதங்கள் என்றால் என்னா ?

 இந்தக் கேள்வியினை நீங்கள் இன்று மக்கள் மத்தியில் கேட்டீர்கள் என்றால் பொதுவாக "மந்திரங்கள், வேதங்கள் என்றால் அவை ஆன்மீகச் சிறப்புமிக்கவை. அவைகளில் மந்திரங்கள் எண்ணில் அடங்காதவை என்றும் , வேதங்கள் எண்ணிக்கையில் நான்கு என்ற விடைமட்டுமே நமக்கு கிட்டும்.

காரணம் நமது சமுகத்தில் நாம் இப்படித் தான் கற்கின்றோம். அவைகள் இறைவனின் வாக்குகளைக் கொண்டு இருக்கின்றன. சமயங்கள் அனைத்தும் அவற்றில் இருந்தே தோன்றின. இவ்வாறு தான் வேதங்களைப் பற்றியக் கருத்துக்களும்  நமக்கு கற்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

 ஆனால் இந்தக் கருத்துக்களை மறுப்பவர்களும் நம்முடைய சமுகத்தில் இருக்கத் தான் செய்கின்றனர்.

மந்திரங்களும், வேதங்களும் முதலில் எப்படி தோன்றியது என்று அறியோமானால். நம் முன்னோர்கள் இயற்கையை இறைவனாக உணர்ந்து எப்படி வழிபாடு செய்தார்களோ, அதேபோல தான் இயற்கையின் ஒலி அதிர்வுகளின் மூலம்தான் ப்ரணவ மந்திரமான அஉம் (ஓம்) மையும் உணர்ந்தார்கள்.

 அப்படி உணரப்பட்ட ஓம் (அஉம்) என்ற மந்திரத்திரத்தை உச்சரிப்பவர்களின் உள்ளத்திற்கு அமைதியையும், அறிவிற்கு கூர்மையையும் ஏற்படுத்தும்  நன்மை தரும் மின்னதிர்வுகளை உண்டாக்குகின்ற அற்புதத்தை உணர்ந்து அது இறைவனின் ஒலி வடிவமாக கருதினார்கள்.

இந்த அஉம் ஓம் இந்து மதத்தில் மட்டுமல்ல முஸ்லிம் , கிருஸ்தவர்களின், மூலமாகவும் உள்ளது .

 முஸ்லீம் மதத்தினர் அல்லஉ அக்பர் என்பார்கள்
அ (ல்லா) உ என்பது பிரணவம் அதாவது அ உ.
இஸ்லாமிய அன்பர்களும் இறைவன் (அல்லா) உருவம் இல்லாதவர் என்றே கூறுகின்றனர்.

கிருஸ்துவர்கள்  ஆமென்  என்பார்கள்  அதை எப்பொழுதும் கூறுவார்கள்.தொடக்கத்திலும் சரி பிரசங்க முடிவிலும் சரி , ஆமென் OAMen என்றார்கள். இதில் ஓம் என்பது மறைந்துள்ளதை கணலாம். ஓம் என்ற எழுத்து வடிவம் இறைவனின் அம்சமாகவே  தெரிகிறது.

அன்போடு மீண்டும் தொடருவோம் அறிந்துகொள்ள ...

இங்கே நான் எழுதப் போகின்றவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது கிடையாது. ஏன் என்றால் உங்கள் எண்ணங்கள் மாறுபடலாம், உங்கள் கர்மவினைகளால் . என்னையும் சேர்த்தே ...✒

🌺அன்போடு தொடருவோம், அறிந்துகொள்ள ,... 🌺 ( பகுதி - 10 )

மேலூர் எஸ். எம் ராஜா
9442822011

Thursday, 17 December 2015

அன்போடு தொடருவோம் , அறிந்துகொள்ள ....!! ( பகுதி - 9 )

அனைவருக்கும் அன்பான வணக்கம் 🙏

யோகிகள், ஞானிகள் அல்லாத சாதாரண மனிதர்கள் மத்தியில், அவர்கள் மனங்களில் இறைவனை நிறுத்துவதற்கு உருவ வழிபாடு இன்றியமையாததாக கருதப்படுகிறது.

இறைவன் உருவம் இல்லாதவர் என்றாலும் நாம் அவரை நினைப்பதற்காகவும் வணங்குவதற்காகவும் உருவ வடிவங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

முன்பு வாழ்ந்த நம்முடைய முன்னோர்கள் நம்மை மீறிய சக்தியை உணர்ந்தார்கள், அது இந்த ப்ரபஞ்சத்தை இயக்கி கொண்டிருப்பதையும் அறிந்தார்கள். அப்படி இந்த ப்ரபஞ்சத்தை இயக்கி கொண்டிருக்கும் அந்த சக்தியைத்தான் இறைவன் என்றார்கள்.

இந்த இறைவனுக்கும் தமக்கும் இடையேயுள்ள உறவுபாலமாக இருப்பது நம்முடனே வாழ்ந்துக் கொண்டிருக்கும் இயற்கை தான் என்று அறிந்துக் வழிபாட்டில் ஈடுபட்டார்கள்.

அப்படி தானறிந்த இயற்கையின் வெளிபாடுகளின் மூலம் இறைவனின் சக்தியை உணர்ந்தார்கள். அப்படியே தான் உணர்ந்த சக்திக்கு தன்னைப் போன்றும் , தான் பார்த்துக்கொண்டு இருக்கும் அம்சங்களையும் சேர்த்தே உருவமாக மாற்றி வழிபாடு செய்தார்கள் .

இப்படி உருவான உருவங்கள் இறைவனின் தன்மைகளைக் குறிப்பவையாக அமைவதால் ஆரம்பத்தில் இறைவனைப் பற்றி அறிந்து கொள்ள உருவ வழிபாடு முக்கியமானதாகிறது.

அப்படியென்றால், இறைவனை வெவ்வேறு உருவங்களில் தரிசிக்க காரணம் என்ன? இறைவன் ஒருவரே தான்.

அவர், வடிவம் உள்ளிட்டவைகளுக்கு அப்பாற்பட்டவராயினும், சக்தியினால் பல்வேறு தொழில்களைச் செய்வதால் அவர் செய்யும் திருத்தொழில்களைப் பொறுத்து வெவ்வேறு பெயர் கொண்டு வெவ்வேறு உருவங்களில் வழிபடுகின்றோம்.

இதனை வாரியார் சுவாமிகள் மிக அழகாக குறிப்பிடுகிறார்.
`தங்கம் ஒன்று தான் என்றாலும் அது வெவ்வேறு வடிவங்களில் அணிகலன்களாகச் செய்யப்படும் பொழுது வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது அல்லவா?' என்று கேட்கிறார் வாரியார்.

கோவிலின் உள்ளே எத்தனை பரிவார மூர்த்திகள் இருந்தாலும் பரம்பொருள் ஒன்றே என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆலய நுழைவாயில்களில் துவார பாலகர்கள் தங்களது சுட்டு விரல்களைக் காட்டி நிற்கின்றார்கள்.

மேலும் அன்புடன் தொடருவோம் ....

இங்கே நான் எழுதப் போகின்றவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது கிடையாது . ஏன் என்றால் உங்கள் எண்ணங்கள் மாறுபடலாம் , உங்கள் கர்மவினைகளால் .... என்னையும் சேர்த்தே ....✒

🌺அன்போடு தொடருவோம் ....  அறிந்துகொள்ள ....🌺(ப-9)

மேலூர் எஸ். எம் ராஜா
9442822011

Wednesday, 16 December 2015

அன்போடு தொடருவோம் , அறிந்துகொள்ள .... !! (பகுதி - 8)

அனைவருக்கும் அன்பான வணக்கம் 🙏  

இந்த பிரபஞ்சத்தை பற்றி எப்படி ஒரு முடிவுக்கு வர முடிவதில்லையோ அவ்வாறே இறைவனைப் பற்றியும் ஒரு முடிவுக்கு வருதல்  மிகவும் சிரமமாகவும். இறைவனை அடைவதை இந்த  உலகம் வேறு விதமாக  பார்க்கின்றது.

ஆம் இறைவனை இவ்வுலகில் உள்ள அனைத்து மனிதர்களும் காண முடியும்.
அதற்கு யோகம்,தியானம், தவம் மற்றும் அனைத்திலும் அவரை காண்பதில் உதவி செய்கின்றது.

இறைவன் எங்கும் உள்ளான் உங்கள் உள்ளும் உள்ளான்.
எது இந்த பிரபஞ்சத்தில் உள்ளதோ அது உன்னுள்ளும் உள்ளது.(அகம் பிரம்மாஸ்மி)
நான் தான் இறைவன்/ நான் கடவுள் (அகம் பிரம்மாஸ்மி)
நீ எதை தேடுகிறாயோ அதுதான் நீ....நீ அதுவாக இருக்கிறாய்  (தத்வமசி).

நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின் மேல் , உங்களை உறுதிப்படுத்திக் கொண்டு பரிசுத்த ஆவிக்குள் ஜெபம் பன்னி தேவனுடைய அன்பானவராக இருங்கள்.

பிரியமானவர்களே , நீ தீமையானதைப் பின்பற்றால், நன்மையானதைப் பின் பற்று. நன்மை செய்கின்றவன் தேவனாக உண்டாயிருக்கின்றான். தீமைகள் செய்கின்றவன் தேவனை காண்பதில்லை என்றும் ( அப்போஸ்தலனாகிய யூதா எழுதியுள்ளார் )

ஒருவரின் ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும், ரஸூலுக்காகவும் அமையுமாயின் அந்த ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும், ரஸூலுக்காகவும் செய்யப்பட்டதாகும். அதாவது ஒருவரின் செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை எண்ணுகின்றானோ, அதற்குறிய பலன்தான் அவனுக்குக் கிட்டும் .
என்றும் .

இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை, மாறாக உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றார். ( என்று நபிகள் . முஸ்லிம் புகாரியில் தெரிவித்துள்ளார் )

ஆதலால் தான் நம்ம அவ்வை பாட்டியும் "உடம்பிலே உத்தமனை காண்" என்கிறார்.

நமது சித்தர்களும் இறைத் தரிசனத்தை பெற்றவர்கள் தான்.

இந்த இறை தரிசனத்தைத் தான்  ஒளி தரிசனம், இறை வெளிப்பாடு, அருட்பெரும்ஜோதி என்று பலவாறு குறிப்பிடுகின்றனர்.

இறைவனை, அல்லாவை, கர்த்தரை  காண எங்கும் செல்லத்தேவை இல்லை. ஏனில் அவன் உங்கள் உள்ளத்தில் தான் இருக்கிறான். இந்த உண்மை அனைத்து மதங்களிலும் ஒளிந்திருந்தாலும் சிலர் ஏற்றுக்கொள்வதில்லை.

யூதர்களின் புனித நூலும் இறைவன் அனைவரிலும் உள்ளான் என்றே குறிப்பிடுகிறது.
(இந்த யூத புனித நூலின் தாக்கத்தால் உருவானவை தான் பைபிள் மற்றும் குரான் என்று கூறப்படுகிறது).
கிருஸ்தவம் இறைவன் ஒளியாக உள்ளான் என்கிறது (God is light).
அல்லாவின் ஒளியை ஊதி அணைக்க முடியாது என்று குரானும் ஜோதி வடிவாகவே இறைவன் இருக்கின்றான் என்று இந்து மதமும் கூறுகிறது . இந்த  ஒளியையே எல்லா மதங்களும் குறிக்கின்றது.

நான் இங்கு சில மதங்களை எடுத்து காட்டுவதற்கு காரணம் அங்கும் சில ஆன்மீக விடயம் உள்ளது என்பதற்காகவே. மத்த படி மதம் ஒரு கலங்கிய குட்டை தான். அதில் உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. இதற்கு எந்த ஒரு மதமும் விதி விலக்கு அல்ல .

மதத்தை பார்க்காமல் மனிதனை மனிதனாக பார்த்தலே- இறைவனுக்கு செய்யும் மிகப்பெரிய வழிபாடாகும்.

நீங்கள் எந்த இறைவனையும்,அல்லாவையும், கர்த்தரையும், சாமியையும் கும்பிடாமலும் இறை தரிசனத்தை பெற முடியும்.

யோகம், ஆன்மீகமே உங்களுக்கு உண்மையான  இறை  தரிசனத்தை காட்டும்.
உங்கள் நெற்றிகண்ணை திறக்கலாம், ஒளியை காணலாம், நீங்களும் இறைவனாகலாம்  என்ற உண்மையை உணரலாம்.

அஉம், ஓம், ஆமென்,ஆமின்  எதுவாயினும் உண்மைக்கு புறம்பாக ஏதும் செய்யாமல் , அணைத்து உயிர்களிடத்திலும், அனைத்துமஅவன் அவனாகவே எண்ணி இருந்தால் நாமும் அவனே ....

மேலும் அன்புடன் தொடருவோம் ..,..

இங்கே நான் எழுதப் போகின்றவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது கிடையாது . ஏன் என்றால் உங்கள் எண்ணங்கள் மாறுபடலாம் . உங்கள் கர்மவினைகளால் , என்னையும் சேர்த்தே ...✒

🌺அன்போடு தொடருவோம் .....     அறிந்துகொள்ள ...... 🌺(ப-8)

மேலூர் எஸ்.எம் ராஜா
9442822011