Saturday 19 December 2015

அன்போடு தொடருவோம் , அறிந்துகொள்ள .... !! ( பகுதி - 10 )

அனைவருக்கும் அன்பான வணக்கம் ...!! 🙏

இறைவனுக்கு உருவ வழிபாடு எப்படி நிகழ்ந்தது என்று அறிந்தோம், இன்று மந்திரங்களும், வேதங்களும் எப்படி உருவானது என்று அறிந்துக்கொள்வோம்..

முதலில் மந்திரங்கள், வேதங்கள் என்றால் என்னா ?

 இந்தக் கேள்வியினை நீங்கள் இன்று மக்கள் மத்தியில் கேட்டீர்கள் என்றால் பொதுவாக "மந்திரங்கள், வேதங்கள் என்றால் அவை ஆன்மீகச் சிறப்புமிக்கவை. அவைகளில் மந்திரங்கள் எண்ணில் அடங்காதவை என்றும் , வேதங்கள் எண்ணிக்கையில் நான்கு என்ற விடைமட்டுமே நமக்கு கிட்டும்.

காரணம் நமது சமுகத்தில் நாம் இப்படித் தான் கற்கின்றோம். அவைகள் இறைவனின் வாக்குகளைக் கொண்டு இருக்கின்றன. சமயங்கள் அனைத்தும் அவற்றில் இருந்தே தோன்றின. இவ்வாறு தான் வேதங்களைப் பற்றியக் கருத்துக்களும்  நமக்கு கற்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

 ஆனால் இந்தக் கருத்துக்களை மறுப்பவர்களும் நம்முடைய சமுகத்தில் இருக்கத் தான் செய்கின்றனர்.

மந்திரங்களும், வேதங்களும் முதலில் எப்படி தோன்றியது என்று அறியோமானால். நம் முன்னோர்கள் இயற்கையை இறைவனாக உணர்ந்து எப்படி வழிபாடு செய்தார்களோ, அதேபோல தான் இயற்கையின் ஒலி அதிர்வுகளின் மூலம்தான் ப்ரணவ மந்திரமான அஉம் (ஓம்) மையும் உணர்ந்தார்கள்.

 அப்படி உணரப்பட்ட ஓம் (அஉம்) என்ற மந்திரத்திரத்தை உச்சரிப்பவர்களின் உள்ளத்திற்கு அமைதியையும், அறிவிற்கு கூர்மையையும் ஏற்படுத்தும்  நன்மை தரும் மின்னதிர்வுகளை உண்டாக்குகின்ற அற்புதத்தை உணர்ந்து அது இறைவனின் ஒலி வடிவமாக கருதினார்கள்.

இந்த அஉம் ஓம் இந்து மதத்தில் மட்டுமல்ல முஸ்லிம் , கிருஸ்தவர்களின், மூலமாகவும் உள்ளது .

 முஸ்லீம் மதத்தினர் அல்லஉ அக்பர் என்பார்கள்
அ (ல்லா) உ என்பது பிரணவம் அதாவது அ உ.
இஸ்லாமிய அன்பர்களும் இறைவன் (அல்லா) உருவம் இல்லாதவர் என்றே கூறுகின்றனர்.

கிருஸ்துவர்கள்  ஆமென்  என்பார்கள்  அதை எப்பொழுதும் கூறுவார்கள்.தொடக்கத்திலும் சரி பிரசங்க முடிவிலும் சரி , ஆமென் OAMen என்றார்கள். இதில் ஓம் என்பது மறைந்துள்ளதை கணலாம். ஓம் என்ற எழுத்து வடிவம் இறைவனின் அம்சமாகவே  தெரிகிறது.

அன்போடு மீண்டும் தொடருவோம் அறிந்துகொள்ள ...

இங்கே நான் எழுதப் போகின்றவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது கிடையாது. ஏன் என்றால் உங்கள் எண்ணங்கள் மாறுபடலாம், உங்கள் கர்மவினைகளால் . என்னையும் சேர்த்தே ...✒

🌺அன்போடு தொடருவோம், அறிந்துகொள்ள ,... 🌺 ( பகுதி - 10 )

மேலூர் எஸ். எம் ராஜா
9442822011

No comments:

Post a Comment