பஞ்சு மெத்தையென
புல்வெளியில்
என் பாதம்
தழுவி நின்ற
அந்தப் பனித்துளிகள்
என்னில்
கானல் நீராக...
தீண்டும் வெயிலையும்
மறைத்து.
என் தேகம் குளிர்வித்த 
அந்த நிழல் தரும்
மரக்கூட்டம்
என்னில்
கானல் நீராக.....
காலை வேளையிலும்,
மாலை வேளையிலும் 
இன்னிசை கச்சேரியால்
கீச்சலிட்டுக் கொண்டிருக்கும் 
பறவை கூட்டம் 
என்னில்
கானல் நீராக,,,,
விடுமுறை இல்லாத
தினத்தில் கூட
நண்பர்களுடன், மீன்களுக்கு போட்டியாக
துள்ளிக் குதித்த
குளக்கரைகள்
என்னில்
கானல் நீராக....
பரந்த வயல் பகுதிகளில் 
அறுவடை முடித்து
குவித்து வைக்கப்பட்டிருக்கும் 
வைக்கோல் குவியல்களில்
சறுக்கி விளையான்ட 
நாட்கள் 
என்னில்
கானல் நீராக.....
இயற்கையோடு இருந்து, 
ஆரோக்கியமாக 
வாழ்ந்த நாட்கள்
என்னில்
கானல் நீராக 
மாறிய 
தருணத்தில்,,,,,
செயற்கையில்
வாழ்ந்து, அற்பத்தில்
மரணிப்பது மட்டும் 
தற்போது 
என்னில்
நிஜமாக....
அன்புடன் 
மேலூர் ராஜா....