துளி துளியாய் 
நின்று பாதம் நனைத்த
அந்த பனிதுளியும் எங்கே..?
பஞ்சு மெத்தையென 
என்பாதம் தழுவிய 
புல்வெளியும் எங்கே...?
தீண்டும் வெயிலையும் 
மறைத்த அந்த நிழல்தரும் 
மரமும் எங்கே..?
மயக்கும் கானகுயிலாய் பாடிய
அந்த பறவைக்கூட்டமும் 
எங்கே...?
கார்மேகமாய் கூடி
மாரிதனை பொழிந்த அந்த
கருமேகக் கூட்டமும் எங்கே...?
குழந்தைதனமாய்
போட்டியுன்டு துள்ளிக்குதித்த அந்த குளக்கரையும்
எங்கே....?
நான் ஓடி ஆடித்திரிந்த 
அந்த பரந்த வயல் வெளியும் எங்கே...?
கரைந்து போனதோ 
அத்தனையும்
கானல்நீரை போல்...
 
No comments:
Post a Comment