Friday 9 August 2013

மதுரை

மதுரையம்பதியில்  64 திருவிளையாடல் புரிந்த ஆடலரசனின் சில திருவிளையாடல் ஆவணியில்  நடைபெறும்...
இவ்வருடம்  நிகழும்  விழாக்களை பற்றி...

முதல் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கும் இவ்விழா தொடர்ந்து பன்னிரண்டாம் நாள் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறும்.

முதல்நாள் (10.08.13)
கரிக்குருவிக்கு உபதேசம் செய்த லீலை...

இரண்டாம் நாள் (11.08.13)
நாரைக்கு முக்தி கொடுத்த லீலை...

மூன்றாம் நாள் (12.08.13)
மாணிக்கம் விற்ற லீலை...

நான்காம் நாள் (13.08.13)
தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை...

ஐந்தாம் நாள்(14.08.13)
கடும்வருமையிலும் தவறாமல் மகேஸ்வரபூஜை நடத்திவந்த  சிவஅடியார் நல்லான்-தருமசீலை தம்பதியற்கு எடுக்க எடுக்க குறையாத உணவுப் பொருட்கள் கிடைக்கும் உலவாகக்கோட்டை  அருளிய லீலை...

ஆறாவது நாள் (15.08.13)
குருவிற்கு துரோகம் புரிந்த சீடனின் அங்கங்களை அவனுடன் வாள் போர்புரிந்து அவனின் அங்கங்களை வெட்டிய லீலை...

ஏழாம் நாள்(16.08.13)
வளையல் விற்ற லீலை..
இந்தநாளில் சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைப்பெறும். இதையொட்டி மதுரை இன்மையிலும் நன்மை தருவார் கோவிலிலும் சிறப்பு பூஜை௧ள் நடைப்பெறும்...

எட்டாம் நாள் (17.08.13)
நரிகளை பரிகளாக்கிய லீலை...
மாணிக்கவாசகருக்காக  நரிகளை பரிகளாக  மற்றி திருவிளையாடல் புரிந்தார், இவ்விழாவினை ஒட்டி திருப்பெருந்துறை ஆவுடையார் (மாணிக்கவாசகர் எழுப்பிய ஆலயம்) கோவிலிலும் திருவாதவூர் திருமறைநாதர் (மாணிக்கவாசகர் பிறந்த ஊர் ) கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைப்பெறும்...

ஒன்பதாம் நாள் (18.08.13)
பிட்டுக்கு மண் சுமந்த லீலை..
மாணிக்கவாசகருக்காக நரிகளை பரிகளாக மாற்றினார் ஆடலரசர் அதை அரசனிடம் சமபித்தார் திருவாதவூரார் ,
பினீபு பரிகள் அனைத்தும் நரிகளாக மாறின இதனால் கோபமுற்ற அரசர் மணிக்கவாசகரை  ஆற்று மணலில் நிறுத்தி தண்டித்தார் இதனால் வைகையில் வெள்ளம்ஏற்பட செய்தார்  இதனால் வெள்ளப் பெருக்கால் உடைந்த அணையை சீர்செய்ய  வீட்டிற்கு ஒருவர் வர ஆணையிட்டார்  ஆனால் அவ்வூரில் இருந்த சிவஅடியாராகிய மூதாட்டி தன் வீட்டில் ஊரைக்காக்க ஒருவன் இல்லையே என்று மிக வருத்தமுற்றால் அவர்களின் வருத்தம் போக்கவே அவரின் சார்பாக  கூலியாள் போல தோன்றி மண் சுமக்க சென்றார் . சரியாக வேலை செய்யாமல் வேடிக்கை செய்து கொண்டிருந்த அந்த அந்த கூலியாளை மன்னன் பிரம்பால் அடிக்க அந்த அடி  அனைவர் மீதும் எதிரொலித்து மாணிக்கவாசகரின் பெருமை உணர்த்திய லீலை...

பத்தாம் நாள் (19.08.13)
பாணபத்ரர் என்ற பக்தருக்கு அருளவும் கர்வம் கொண்ட பாகவதருக்கு  பாடம் புகட்டவும் இறைவன் விறகுவெட்டியாக வந்து விறகு விற்ற லீலை...
அருளினார்.

பதினொன்றாம் நாள் (20.08.13)
இன்று சட்டத்தேர் பவனி நடைப்பெறும்... (இது அரசனாக ஈசன் வலம்வரும் நாள்..

பன்னிரண்டாம் நாள் (21.08.13)
இன்று திர்த்தவாரியுடன் விழா இனிதே நிறைவு பெறும்....

திருவிளையாடல் புரிந்த ஈசனின் திருவிளையாடல் விழாவினைக் கண்டு ஆடலரசனின் அருளைப் பெற தங்களை அன்புடன் அழைக்கின்றேன்.....

அன்புடன்..
மேலூர் ராஜா...

No comments:

Post a Comment