Friday 26 December 2014

சுனாமி

பேரழிவின் 10வது நினைவுநாள் இன்று 26 - 12 - 2014

கடந்த 2004ம்
ஆண்டு இந்தோனேசியாவில் ஏற்பட்ட
கடும் பூகம்பத்தைத்
தொடர்ந்து சுனாமி அலைகள்
எழுந்தன. இந்தோனேசியாவில்
புறப்பட்ட அந்த அலைகள் இந்தியாவின்
தமிழகத்தின் கடலோரப்
பகுதிகளை பெரும்
சீரழிவை ஏற்படுத்தி ஓய்ந்தன.
மனித குலம் காணாத இந்தப் பெரும்
பேரழவுக்கு பல்வேறு நாடுகளைச்
சேர்ந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர்
உயிரிழந்தனர். தமிழகத்தில் நாகப்பட்டனம்,
கடலூர், சென்னை, கன்னியாகுமரி,
தூத்துக்குடி உள்ளிட்ட கடலோரப்
பகுதிகள் சுனாமியால் கடும்
பாதிப்பை சந்தித்தன. பல
ஆயிரக்கணக்கானோர் கடலுக்குள்
இழுத்துச் செல்லப்பட்டன. பல ஆயிரம்
மீனவர்கள் வீடுகள், உறவுகளை இழந்து
தவிப்புக்குள்ளாகினர். பல
நூறு பேரைக் காணவில்லை.
ஒரு சில மணி நேரங்களில்
ஒட்டுமொத்த தமிழக கடலோரமும்
பிணக்காடாகிப் போனது.
தமிழகத்தை மட்டுமல்லாமல்
இலங்கையின் கடலோரப்
பகுதிகளையும் புரட்டிப்
போட்டு விட்டது சுனாமி.
அதேசமயம்,
இலங்கையை சுனாமி அலைகள்
தாக்கியதன் மூலம்
தமிழகத்திற்கு வரவிருந்த பெரும்
சேதம் தவிர்க்கப்பட்டதாகவும்,
தமிழகத்தை சுனாமி தாக்கியபோது
அலைகளின் வேகம்
சற்று மட்டுப்பட்டதால்தான் மிகப்
பெரிய அசம்பாவிதம் நேராமல்
போனதாகவும் விஞ்ஞானிகள்
தெரிவித்தனர்.
ஆனால் எப்படித் தாக்கியிருந்தால்
என்ன, இந்தத் தாக்குதலுக்கே பல ஆயிரம்
பேரைப் பறி கொடுத்து பெரும்
சேதத்தையும்
சந்தித்து விட்டது கடலோரத் தமிழகம்.
அந்த சோக சம்பவத்தின்
10வது நினைவு தினம் இது. ஆழிப்
பேரழிவு என்பதை வரலாற்று
நூல்களில் மட்டுமே படித்திருந்த இந்த
உலக மக்களுக்கு முதல் முறையாக
அதை நேரில் காணும்
வாய்ப்பை ஏற்படுத்திக்
கொடுத்து விட்டது இயற்கை.
மீண்டும் ஒருமுறை இன்நிகழ்வுப் போல்  நிகாழ்திருக்க இறைவனைப் பிராத்திப்போம் .

Wednesday 17 December 2014

கோயில்களில் செய்யக்கூடாதவை ,,,


காந்த அலைகள் அதிகம் வீசப்படும்
இடங்கள்தான் இந்த கோயில்கள்
கோயில்களின் கீழே அதுவும் இந்த
கர்ப்பகிரகத்தின் கீழே சில
செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும்
இது அந்த சக்தியை வீண் செய்யாமல்
சக்தியை பன்மடங்காக்கி வெளிக்
கொண்டு வரும் வாசலில்
இடது மற்றும் வலது புறத்தில்
இருந்து இறைவனை வணங்கும்
ஆட்களுக்கு கிடைக்கச் செய்யும்.
கோயிலின்
பிரகாரத்தை இடமிருந்து வலமாய்
வரும் காரணம் சக்தியின்
சுற்று பாதை இது தான் அதனால்
தான் மூலஸ்தானத்தை சுற்றும்
போது அப்படியே சக்தி சுற்றுபாதை
கூட சேர்ந்து அப்படியே உங்கள்
உடம்பில் வந்து சேரும். இந்த காந்த
மற்றும் ஒரு வித நேர்விசை மின்சார
சக்தி சொர்ணாபிஷேகம் இந்த
சக்தியை ஒவ்வொரு நாளும்
கூட்டிகொண்டே செல்லும்.

நன்றி ,.

சித்தர்களும் மந்திரங்களும்

ஷீரடியில் சாய்பாபா சிலை உருவான விதம் ,,,

ஷீரடியில் உள்ள
சாய்பாபா சிலை உருவான விதம்
36 வருடங்களாக பாபாவின்
புகைப்படத்தை வைத்துதான் பூஜை செய்து
வந்தனர்.அப்பொழுது ஒரு நாள்
இத்தாலியில் இருந்து வெள்ளை பளிங்குக் கல்
ஒன்று பம்பாய்
துறைமுகத்திற்கு இறக்குமதி ஆனது.அது
அப்பொழுது எதற்கு வந்தது,ஏன்
வந்தது என்று யாருக்கும்
தெரியாது.அதை இறக்குமதி செய்தவரும்
அதை வாங்க வரவில்லை.உடனே துறைமுக அதிகாரிகள்
அதனை ஏலத்தில் விட
ஏற்பாடு செய்தனர்.இதை அறிந்த சாய்
சன்ஸ்தான் அதிகாரி அதை ஏலத்தில்
எடுத்து அதை பம்பாயில் உள்ள பாலாஜி வஸந்த்
தாலிம் என்னும் சிற்பியிடம் பாபாவின்
கருப்பு வெள்ளை புகைப்படத்தை அளித்து அதே மாதிரி
சிலை செய்ய கூறினார்.அந்தப் புகைப்படம்
தெளிவாக இல்லாததால் சிற்பி தாலிம்
மிகவும்
கஷ்டபட்டார்.அப்பொழுது பாபா அவர்
கனவில் தோன்றி அவருடைய முகத்தை பலவித
கோணங்களில் காட்டி சிற்பியின் கஷ்டத்தைப்
போக்கி அவரை உற்சாகப்படுத்தினார்.சிற்பி பின்னர்
தெளிவு பெற்று மிகவும் சிறப்பாக
எல்லோரும் எதிர்பார்த்தது போல் மிகவும் அழகாகச்
செய்து கொடுத்தார்.பின்னர் அந்த
சிலை 7ம் தேதி அக்டோபர் மாதம் 1954ம்
ஆண்டு பிரதிஷ்டை செய்தார்கள்.

நன்றி ,,,

http://www.shirdisaibabasayings.com

தீபாராதனை

தீபாராதனை காட்டுவது ஏன்?

கோயில்களில் கற்பூர
தீபாராதனையும்,
நெய்விளக்கு தீபாராதனையும்
காட்டப்படுகின்றன. கற்பூரமும்
நெய்விளக்கும்
கடைசிவரை எரிந்து போகும்.
எதுவும் மிஞ்சாது.மனிதன் இறந்த
பிறகும் இதே நிலை தான். எஞ்சும்
சாம்பல் கூட தண்ணீரில்
கரைக்கப்பட்டு விடுகிறது. இந்த
தத்துவத்தை உணர்த்தவே கோயில்களில்
தீபாராதனை காட்டப்படுகிறது.
எனவே இந்த தத்துவத்தின்
படி எதுவுமே மிச்சமில்லாமல்
நம்மை இறைவனுக்கு அர்ப்பணிப்போம்.
இதர வகை வழிபாடுகளில்
பிரசாதமாக ஏதேனும் மிஞ்சும்.
ஆனால், கற்பூர வழிபாட்டில்
எதுவுமே மிஞ்சாது. நாமும்
கற்பூரத்தை போல்
நம்மை முழுவதுமாக
இறைவனுக்கு அர்ப்பணித்து
வழிபட்டால்
இறைவனது ஜோதி தரிசனம்
கிடைக்கும் என்பதையே கற்பூர
தீபாராதனை உணர்த்துகிறது.

Melur raja

கருவறை

மீண்டும்
என் பிறப்பு
உன் கருவறையில் ....