Friday, 8 March 2013

மங்கை

எப்போதும் நீ....
என்னுடனே நீ....

உருவங்கள் மாறும்போதே...
உன்னதமான பெயராலே.....

அழகுசெல்லம்  என்று மழலையிலை......

அம்முகுட்டி என்று தவழயிலே.....

சிட்டுகுட்டி என்று
வீரநடை விரல்பிடித்து நடக்கையிலே....

நானல்வந்து
முகம்மூடும் பருவத்தில் மங்கையாக....

தங்கமங்கையாக நீ சொலிக்கையிலே.
மணமேடையிலே மணபெண்ணாக.......

ஈடில்லாதா இன்ப சுமை
நீ சுமைக்கையில்....
தரணிபோற்றும் தாயாக........
என்னில் நீ உன்னில் நான் என்றே...
என்னையாலும் தாரமாக .....

கவலைகள் மறந்து நானும் குழந்தையாக மாற என் குழந்தையாக நீ......

என்றும் நீ எப்போழுதும் நீ...என்னுடனே..

Thursday, 7 March 2013

மதுரை

விரைந்து வா
முத்தமிழின் சங்கம்
பார்க்க....
பட்டொளி வீசி பறந்திடும்
எம் வீர
மீன்கொடியும் பார்க்க....
தமிழ் மாதங்களே
வீதிகளாக கொண்ட
எம்சீர்மிகு வளத்தை
பார்க்க....
பார்போற்றும்
நேசங்கொண்ட..எம்
மக்களைப் பார்க்க
விரைந்து வா......
ஆணுக்கு
பெண் நிகர்றானவள்...
என்று இந்த
பூவுலகுக்கே எடுத்துரைத்த.
பூ
வனத்திற்கு விரைந்து வா......
அரசர்களும் மக்களும் ஆளும்
பூமியில் இன்றும்
உலகையாளும்..
எம் பெருமான்
ஈசனும் ...
அன்னையான எம்
உமையவள் ...
மீனாட்சியும்...
என்றும் நிறந்தரமாக
ஆட்சி புரியும் எங்கள்
மதுரையம்பதிக்கு
விரைந்துவா.....
வைத்தான் கை
ஆதலால் வந்த
வைகையையும் காணவா......
காண
கண்கோடி வேண்டும் என
என்னவர்களும் என்னாட்டவர்களும்....
மகிழும் எங்கள்
கள்ளழகனை காண வா....
திருமலையில் கோவில்
கொண்டாலும் என்றும்
தன்
தமக்கையினை சுற்றியே உள்ள....எம்
சுந்தரராஜனாக உள்ள
பெருமாளையும் காண வா.......
இந்திரனும்...
குறவச்சியனும்
என்னிடத்தில் சமமானவர்களே..என
்று எடுத்துரைக்கும்
எம் குன்றின்
நாயகனாக உள்ள
குமாரனையும் காணவா...
சுட்டப்பழத்தின்
ருசி அறிய
முதாட்டியிடம் விளையாடிய ..
எம்
ஞானப் பழத்தின் வடிவான
பழமுதிர்சோலையின்.
வடிவான
வேலவனையும் காணவா....
தன் உடையவள்
என்றும் என் இதயத்தில்..
என்னை நேசித்தவர்
என்றும் என்னிடத்தில்...
என்று எடுத்துரைத்த சிம்ம
முகத்தோனை நரசிங்க பெருமாளாக
காணவா......
மன்னனின் அரசவையில்
இருந்தாலும் ...
எம்மை ஆளும்
ஆண்டவனும் என்றும்
என்னுடனே ....
என்ற மாணிக்கமாக
நாங்கள் கண்ட எங்கள்
திருவாதவூராரையும் காணவா.....
இது மதுரையம்பதி என்னும்
மாணிக்கம்
பதியை காணவா....
விரைந்துவா....

இதழ்கள்

உன்
இதழ்களை
சுவைத்த பின்பு
அந்த
தேன் துளிகள்கூட
கசக்குதடி...

கனவு தேவதை

தூரிகையில்
வந்த துயில் பெண்ணே...
என்
துயிலையும்
தொலைத்தாயடி கண்ணே....
உன்னால்
கடலில் தத்தளிக்கும்
கட்டுமரமாய் ஆனேன்...
விழிமூட
மறந்தேன் உன்
வழிதேடியே வந்தேன்.....
பெண்ணே
உன்னிடத்தில் பாஷையின்றி
ஓசைதானே கேட்டேன்.....
பாவை
உன் புன்முறுவலால் தானே...

எனக்காக....

என்
பரந்த நெற்றிப்பரப்பில்
உன்னை...
திலகமாய் தீட்டி
இருவிழிகளையும்
காவல்வைத்திருக்கின்றேன்...

Wednesday, 6 March 2013

உன் பார்வை

உன்
பார்வை
படாமல் ஒற்றை
மரமாய் தவிக்கிறேன்.....

காற்றடித்தும்
கலையாமல்
தவிக்கிறேன்.....

நிழல் தரக்கூட
மறந்தேன்
அடி பெண்ணே
உன்
நினைவுகளாளே...

Monday, 4 March 2013

தென்றலே...


மரங்கிளைகள் கூட
இசைக்கிறதே காற்றே
உன் வருகையால்...

எங்கே கற்றுக்கொண்டதோ
அழகான இன்னிசையை
சலசலக்கும் நீரோடை.....

தென்றல் வருகையால்
சிலித்தது மரக்கிளைகள்...