Thursday 7 March 2013

மதுரை

விரைந்து வா
முத்தமிழின் சங்கம்
பார்க்க....
பட்டொளி வீசி பறந்திடும்
எம் வீர
மீன்கொடியும் பார்க்க....
தமிழ் மாதங்களே
வீதிகளாக கொண்ட
எம்சீர்மிகு வளத்தை
பார்க்க....
பார்போற்றும்
நேசங்கொண்ட..எம்
மக்களைப் பார்க்க
விரைந்து வா......
ஆணுக்கு
பெண் நிகர்றானவள்...
என்று இந்த
பூவுலகுக்கே எடுத்துரைத்த.
பூ
வனத்திற்கு விரைந்து வா......
அரசர்களும் மக்களும் ஆளும்
பூமியில் இன்றும்
உலகையாளும்..
எம் பெருமான்
ஈசனும் ...
அன்னையான எம்
உமையவள் ...
மீனாட்சியும்...
என்றும் நிறந்தரமாக
ஆட்சி புரியும் எங்கள்
மதுரையம்பதிக்கு
விரைந்துவா.....
வைத்தான் கை
ஆதலால் வந்த
வைகையையும் காணவா......
காண
கண்கோடி வேண்டும் என
என்னவர்களும் என்னாட்டவர்களும்....
மகிழும் எங்கள்
கள்ளழகனை காண வா....
திருமலையில் கோவில்
கொண்டாலும் என்றும்
தன்
தமக்கையினை சுற்றியே உள்ள....எம்
சுந்தரராஜனாக உள்ள
பெருமாளையும் காண வா.......
இந்திரனும்...
குறவச்சியனும்
என்னிடத்தில் சமமானவர்களே..என
்று எடுத்துரைக்கும்
எம் குன்றின்
நாயகனாக உள்ள
குமாரனையும் காணவா...
சுட்டப்பழத்தின்
ருசி அறிய
முதாட்டியிடம் விளையாடிய ..
எம்
ஞானப் பழத்தின் வடிவான
பழமுதிர்சோலையின்.
வடிவான
வேலவனையும் காணவா....
தன் உடையவள்
என்றும் என் இதயத்தில்..
என்னை நேசித்தவர்
என்றும் என்னிடத்தில்...
என்று எடுத்துரைத்த சிம்ம
முகத்தோனை நரசிங்க பெருமாளாக
காணவா......
மன்னனின் அரசவையில்
இருந்தாலும் ...
எம்மை ஆளும்
ஆண்டவனும் என்றும்
என்னுடனே ....
என்ற மாணிக்கமாக
நாங்கள் கண்ட எங்கள்
திருவாதவூராரையும் காணவா.....
இது மதுரையம்பதி என்னும்
மாணிக்கம்
பதியை காணவா....
விரைந்துவா....

No comments:

Post a Comment