Thursday, 30 January 2014

பட்டிணத்தார் பாடல்கள்

பட்டினத்தார் புலம்பல்
மென்று விழுங்கி விடாய்கழிக்க
நீர்தேடல்
என்று விடியும்
எனக்கு எங்கோவேநன்றி
கருதார் புரமூன்றும் கட்டழலால்
சென்ற
மருதாஉன் சந்நிதிக்கே வந்து.
கண்டம் கரியதாம்;
கண்மூன்று உடையதாம்
அண்டத்தைப் போல
அழகியதாம்தொண்டர்
உடல்உருகத் தித்திக்கும் ஓங்குபுகழ்
ஒற்றிக்
கடலருகே நிற்கும் கரும்பு.
ஓடுவிழுந்து சீப்பாயும் ஒன்பதுவாய்ப்
புண்ணுக்கு
இடுமருந்தை யான்அறிந்து கொண்டேன்கடுஅருந்தும்
தேவாதி தேவன் திருவொற்றியூர்த்
தெருவில்
போவார் அடியிற் பொடி.
வாவிஎல்லாம் தீர்த்தம்; மணல்எல்லாம்
வெண்நீறு
காவனங்கள் எல்லாம்
கணநாதர்;பூவுலகில்
ஈது சிவலோகம்
என்றென்றே மெய்த்தவத்தோர்
ஓதும் திருவொற்றி யூர்.
ஆரூரர் இங்கிருந்த அவ்வூர்த்
திருநாளென்று
ஊரூர்கள் தோறும் உழலுவீர்! நேரே
உளக்குறிப்பை நாடாத ஊமர்காள் நீவீர்
விளக்கிருக்கத் தீத்தேடு வீர்.
எருவாய்க்கு இருவிரல்மேல்
ஏர்உண்டு இருக்கும்
கருவாய்க்கோ கண்கலக்கப் பட்டாய்!
திருவாரூர்த்
தேரோடும் வீதியிலே செத்துக்
கிடக்கின்றாய்
நீரோடும் தாரைக்கே நீ!
எத்தனைஊர்
எத்தனைவீடு எத்தனைதாய்?
பெற்றவர்கள்
எத்தனைபேர் இட்டழைக்க
ஏன்என்றேன்நித்தம்
எனக்குக் களையாற்றாய் ஏகம்பா;
கம்பா
உனக்குத் திருவிளையாட் டோ?
அத்திமுதல் எறும்பீ றானவுயிர்
அத்தனைக்கும்
சித்தம் மகிழ்ந்தளிக்கும் தேசிகாமெத்தப்
பசிக்குதையா! பாவியேன்
பாழ்வயிற்றைப் பற்றி
இசிக்குதையா காரோண ரே!
பொய்யை ஒழியாய்;
புலாலை விடாய்; காளத்தி
ஐயரை எண்ணாய்;
அறம்செய்யாய்;வெய்ய
சினமே ஓழியாய்;
திருவெழுத்தைந்து ஓதாய்;
மனமே உனக்கென்ன மாண்பு?
மண்ணும் தணல்ஆற வானும்
புகைஆற
எண்ணறிய தாயும்
இளைப்பாறப்பண்ணுமயன்
கையாறவும் அடியேன் காலாறவும்
காண்பார்
ஐயா! திருவை யாறா!
காலன் வருமுன்னே கண்பஞ்
சடையுமுன்னே
பாலுண் கடைவாய்ப்
படுமுன்னேமேல்விழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார்
சுடுமுன்னே
குற்றாலத் தானையே கூறு!
சிற்றம் பலமும் சிவனும் அருகிருக்க
வெற்றம் பலம்தேடி விட்டோமேநித்தம்
பிறந்தஇடம் தேடுதே பேதைமட
நெஞ்சம்
கறந்தஇடம் நாடுதே கண்!
தோடவிழும் பூங்கோதைத்
தோகைஉனை இப்போது
தேடினவர் போய்விட்டார்
தேறியிருநாடிநீ
என்னை நினைத்தால் இடுப்பில்
உதைப்பேன்நான்
உன்னை நினைத்தால் உதை!
வாசற் படிகடந்து வாராத
பிச்சைக்குஇங்
காசைப் படுவதில்லை அண்ணலே!
ஆசைதனைப்
பட்டிறந்த காலமெல்லாம் போதும்
பரமேட்டி
சுட்டிறந்த ஞானத்தைச் சொல்.
நச்சவரம் பூண்டானை நன்றாய்த்
தொழுவதுவும்
இச்சையிலே தான்அங்
கிருப்பதுவும்பிச்சைதனை
வாங்குவதும் உண்பதுவும்
வந்துதிரு வாயிலில்
தூங்குவதும் தானே சுகம்.
இருக்கும்
இடம்தேடி என்பசிக்கே அன்னம்
உருக்கமுடன் கொண்டு வந்தால்
உண்பேன்பெருக்க
அழைத்தாலும் போகேன் அரனே!
என்தேகம்
இளைத்தாலும் போகேன் இனி.
விட்டுவிடப் போகுதுயிர்!
விட்டஉடனே உடலைச்
சுட்டுவிடப் போகின்றார்
சுற்றத்தார்அட்டியின்றி
எந்நேர மும்சிவனை ஏற்றுங்கள்;
போற்றுங்கள்;
சொன்னேன் அதுவே சுகம்.
ஆவியோடு காயம் அழிந்தாலும்
மேதினியில்
பாவி என்று நாமம் படையாதே!
மேவியசீர்
வித்தாரமும் கடம்பும்
வேண்டா மடநெஞ்சே
செத்தாரைப் போலே திரி.
வெட்ட வெளியாய் வெளிக்கும்
தெரியாது!
கட்டளையும் கைப்பணமும் காணாது!
இட்டமுடன்
பற்றென்றால் பற்றாது;
பாவியே நெஞ்சில்
அவன் இற்றெனவே வைத்த இனிப்பு.
இப்பிறப்பை நம்பி இருப்பாயோ நெஞ்சமே!
வைப்பிருக்க
வாயில்மனை இருக்கச்சொப்பனம்போல
விக்கிப்பற் கிட்டக்கண்
மெத்தப்பஞ்சிட்டு அப்பைக்
கக்கிச்செத் துக்கொட்டக் கண்டு.
மேலும் இருக்க விரும்பினையே!
வெண்விடையோன்
சீலம் அறிந்திலையே! சிந்தையே!
கால்கைக்குக்
கொட்டையிட்டு மெத்தையிட்டு குத்திமொத்தப்
பட்டஉடல்
கட்டையிட்டுச் சுட்டுவிடக் கண்டு.
ஒன்பது வாய்த்
தோல்பைக்கு ஒருநாளைப் போலவே
அன்புவைத்து நெஞ்சே அலைந்தாயே!
வன்கழுக்கள்
தத்தித்தத் திச்செட்டை தட்டிக்காட்
டிப்பிட்டுக்
கத்திக்குத் தித்தின்னக் கண்டு.
இன்னம் பிறக்க
இசைவையா நெஞ்சமே?
மன்னரிவர்
என்றிருந்து வாழ்ந்தாரைமுன்னம்
எரிந்தகட்டை மீதில்
இணைக்கோ வணத்தை
உரிந்துருட்டிப் போட்டது கண்டு!
முதற்சங்கு அமுதூட்டும்!
மொய்குழலார் ஆசை
நடுச்சங்கு நல்விலங்கு பூட்டும்!
கடைச்சங்கம்
ஆம்போ ததுஊதும்! அம்மட்டோ,
இம்மட்டோ,
நாம்பூமி வாழ்ந்த நலம்?
எத்தனை நாள்கூடி எடுத்த
சரீரம்இவை?
அத்தனையும் மண்தின்ப தல்லவோ?
வித்தகனார்
காலைப் பிடித்துமெள்ளக்
கங்குல்பகல் அற்றிடத்தே
மேலைக் குடியிருப் போமே!
எச்சிலென்று சொல்லி இதமகிதம்
பேசாதீர்
எச்சில் இருக்கும்
இடம்அறியீர்எச்சில்தனை
உய்த்திருந்து பார்த்தால்
ஒருமை வெளிப்படும்; பின்
சித்த நிராமயமா மே!
எத்தனைபேர் நட்டகுழி? எத்தனைபேர்
தொட்டமுலை?
எத்தனைபேர் பற்றி இழுத்தஇதழ்?
நித்தம்நித்தம்
பொய்யடா பேசும்புவியின்
மடமாதரை விட்டு
உய்யடா! உய்யடா! உய்!
இருப்பதுபொய் போவதுமெய்
என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை எண்ணாதே!
பருத்ததொந்தி
நம்மதென்று நாமிருப்ப
நாய்நரி பேய்கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தான்!
எத்தொழிலைச் செய்தாலும்
ஏதவத்தைப் பட்டாலும்
முத்தர்மனம் இருக்கும்
மோனத்தேவித்தகமாய்க்
காதிவிளை யாடிஇரு கைவீசி வந்தாலும்
தாதிமனம் நீர்க்குடத்தே தான்!
மாலைப் பொழுதில்நறு மஞ்சள்
அரைத் தேகுளித்து
வேலை மெனக்கிட்டு விழித்திருந்துகுலாகிப்
பெற்றாள்; வளர்ந்தாள்; பெயரிட்டாள்;
பெற்றபிள்ளை
பித்தானால் என்செய்வாள் பின்?

பத்ரகிரியார் பாடல்கள்

முத்திதரும் ஞானமொழியாம் புலம்பல்
சொல்
அத்தி முகவன்தான் அருள்பெறுவ
தெக்காலம்?
ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச்
சுட்டெரித்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவ
தெக்காலம்?
நீங்காச் சிவயோக
நித்திரை கொண்டே இருந்து
தேங்காக் கருணைவெள்ளம்
தேக்குவதும் எக்காலம்?
தேங்காக் கருணைவெள்ளம்
தேங்கியிருந் துண்பதற்கு
வாங்காமல் விட்டகுறை வந்தடுப்ப
தெக்காலம்?
ஓயாக் கவலையினால்
உள்ளுடைந்து வாடாமல்,
மாயாப் பிறவி மயக்கறுப்ப
தெக்காலம்?
மாயாப்
பிறவி மயக்கத்தை ஊடறுத்துக்
காயா புரிக்கோட்டை கைக்கொள்வ
தெக்காலம்?
சேயாய்ச்
சமைந்து செவிடூமை போல்திரிந்து
பேய்போல் இருந்துஉன் பிரமைகொள்வ
தெக்காலம்?
பேய்போல் திரிந்து, பிணம்போல்
கிடந்த பெண்ணைத்
தாய்போல் நினைத்துத் தவம்முடிப்ப
தெக்காலம்?
கால்காட்டிக் கைகாட்டிக் கண்கள்
முகம்காட்டி
மால்காட்டும்
மங்கையரை மறந்திருப்ப தெக்காலம்?
பெண்ணினல்லார் ஆசைப்
பிரமையினை விட்டொழித்துக்
கண்ணிரண்டும் மூடிக் கலந்திருப்ப
தெக்காலம்?
வெட்டுண்ட புண்போல் விரிந்த
அல்குல் பைதனிலே
தட்டுண்டு நிற்கை தவிர்வதும்
எக்காலம்?
தந்தை, தாய், மக்கள் சோதரரும்
பொய்யெனவே
சிந்தைதனில் கண்டு கிறுகிறுப்ப
தெக்காலம்?
வம்படிக்கும் மாதருடன் வாழ்ந்தாலும்
மன்னுபுளி
யம்பழமும் ஓடும்போல்
ஆவதினி எக்காலம்?
பற்றற்று நீரில்
படர்தா மரை இலைபோல்
சுற்றத்தை நீக்கிமனம் தூரநிற்ப
தெக்காலம்?
சல்லாப
லீலையிலே தன்மனைவி செய்தசுகம்
சொல்லாரக் கண்டெனக்குச்
சொல்வதினி எக்காலம்?
மரும அயல்புருடன் வரும்நேரம்
காணாமல்
உருகு மனம்போல் என்உள்ளம்
உருவதும் எக்காலம்?
தன்கணவன் தன்சுகத்தில்
தன்மனம்வே றானதுபோல்
என்கருத்தில் உன்பதத்தை ஏற்றுவதும்
எக்காலம்?
கூடிப் பிரிந்துவிட்ட
கொம்பனையே காணாமல்
தேடித் தவிப்பவள்போல் சிந்தவைப்ப
தெக்காலம்?
எவ்வனத்தின் மோகம் எப்படியுண்
டப்படிபோல்
கல்வனத் தியானம் கருத்துவைப்ப
தெக்காலம்?
கண்ணால் அருவி கசிந்து முத்துப்
போல் உதிரச்
சொன்ன பரம்பொருளைத்
தொகுத்தறிவ தெக்காலம்?
ஆக மிகவுருக, அன்புருக, என்புருகப்
போக அனுபூதி பொருத்துவதும்
எக்காலம்?
நீரில் குமிழ்ப்போல் நிலையற்ற
வாழ்வைவிட்டுன்
பேரில் கருணைவெள்ளம்
பெருக்கெடுப்ப தெக்காலம்?
அன்பைஉருக்கி, அறிவை அதன்
மேல்புகட்டித்
துன்ப வலைப்பாசத் தொடரறுப்ப
தெக்காலம்?
மனதைஒரு வில்லாக்கி,
வான்பொறியை நாணாக்கி
எனதறிவை அம்பாக்கி,
எய்வதினி எக்காலம்?
கடத்துகின்ற தோணிதனைக்
கழைகள்குத்தி விட்டாற்போல்
நடத்துகின்ற சித்திரத்தை நான்அறிவ
தெக்காலம்?
நின்றநிலை பேராமல்,
நினைவில்ஒன்றும் சாராமல்
சென்றநிலை முக்திஎன்று சேர்ந்தறிவ
தெக்காலம்?
பொன்னும் வெள்ளியும்பூண்ட
பொற்பதத்தை உள்அமைத்து
மின்னும் ஒளிவெளியே விட்டடைப்ப
தெக்காலம்?
அருணப்பிரகாசம் அண்டம் எங்கும்
போர்த்தது போல்
கருணைத் திருவடியில் கலந்துநிற்ப
தெக்காலம்?
பொன்னில் பலவிதமாம் பூடணம்உண்
டானதுபோல்
உன்னில் பிறந்து உன்னில்
ஓடுங்குவதும் எக்காலம்?
நாயில் கடைப்பிறப்பாம் நான்பிறந்த
துன்பம்அற
வேயில் கனல்ஒளிபோல்
விளங்குவதும் எக்காலம்?
சூரியனின்
காந்தஒளி சூழ்ந்துபஞ்சைச்
சுட்டதுபோல்
ஆரியநின் தோற்றத்து அருள்பெறுவ
தெக்காலம்?
இரும்பில் கனல்மூட்டி இவ்வுருபோய்
அவ்வுருவாய்க்
கரும்பில் சுவைரசத்தைக் கண்டறிவ
தெக்காலம்?
கருக்கொண்ட
முட்டைதனை கடல்ஆமை தான்நினைக்க
உருக்கொண்ட வாறதுபோல்
உனைஅடைவை தெக்காலம்?
வீடுவிட்டுப் பாய்ந்து வெளியில்
வருவார்போல்
கூடுவிட்டுப் பாயும் குறிப்பறிவ
தெக்காலம்?
கடைந்த வெண்ணெய்மோரில் கலவாத
வாறதுபோல்
உடைந்து தமியன்உனைக்
காண்பதுவும் எக்காலம்?
இருளை ஒளிவிழுங்கி ஏகஉருக்
கொண்டாற் போல்
அருளை விழுங்கும்இருள்
அகன்றுநிற்ப தெக்காலம்?
மின்எழுந்து மின்ஒடுங்கி விண்ணில்
உறைந்தாற்போல்
என்னுள்நின்று என்னுள்ளேயே யான்அறிவ
தெக்காலம்?
கண்டபுனல் குடத்தில் கதிர்ஒளிகள்
பாய்ந்தாற்போல்
கொண்ட சொரூபமதைக் கூர்ந்தறிவ
தெக்காலம்?
பூணுகின்ற பொன்அணிந்தால்
பொன்சுமக்கு மோஉடலைக்
காணுகின்ற என்கருத்தில் கண்டறிவ
தெக்காலம்?
செம்பில் களிம்புபோல்
சிவத்தை விழுங்கமிக
வெம்பிநின்ற
மும்மலத்தை வேறுசெய்வ
தெக்காலம்?
ஆவியும் காயமும்போல்
ஆத்துமத்து நின்றதனை
பாவி அறிந்துமனம் பற்றிநிற்ப
தெக்காலம்?
ஊமை கனாக்கண்டு உரைக்கறியா இன்பம்அதை
தாம்அறிந்து கொள்வதற்கு நாள்வருவ
தெக்காலம்?
எள்ளும் கரும்பும் எழுமலரும்
காயமும்போல்
உள்ளும் புறமும்நின்று உற்றறிவ
தெக்காலம்?
அன்னம்
புனலை வகுத்தமிழ்தை உண்பதுபோல்
என்னை வகுத்துன்னை இனிக்காண்ப
தெக்காலம்?
அந்தரத்தில் நீர்பூத்து அலந்தெழுந்த
தாமரைபோல்
சிந்தைவைத்துக் கண்டு தரிசிப்ப
தெக்காலம்?
பிறப்பும் இறப்பும் அற்றுப்
பேச்சும்அற்று மூச்சும்அற்று
மறப்பும் நினைப்புமற்று மாண்டிருப்ப
தெக்காலம்?
மன்னும் பரவெளியை மனவெளியில்
அடைத்தறிவை
என்னுள் ஒரு நினைவை எழுப்பிநிற்ப
தெக்காலம்?
தன்உயிரைக் கொண்டு தான்திரிந்த
வாறதுபோல்
உன்உயிரைக்
கொண்டு இங்கு ஒடுங்குவதும்
எக்காலம்?
சேற்றில் கிளைநாட்டும் திடமாம்
உடலைஇனிக்
காற்றில்உழல் சூத்திரமாய்க்
காண்பதினி எக்காலம்?
என்வசமும் கெட்டு இங்கிருந்த
வசம்அழிந்து
தன்வசமும் கெட்டுஅருளைச்
சார்ந்திருப்பது எக்காலம்?
தன்னை மறந்து தலத்து நிலைமறந்து
கன்மம் மறந்து கதிபெறுவ
தெக்காலம்?
என்னை என்னிலே மறைந்தே இருந்த
பதிமறந்து
தன்னைத் தானேமறந்து தனித்திருப்ப
தெக்காலம்?
தன்னையும்
தானேமறந்து தலைவாசல்
தாழ்போட்டே
உன்னை நினைத்துள்ளே உறங்குவதும்
எக்காலம்?
இணைபிரிந்த
போதில்அன்றி இன்பமுறும்
அன்றிலைப்போல்
துணைபிரிந்த போதுஅருள்நூல்
தொடர்ந்துகொள்வ
தெக்காலம்?
ஆட்டம்ஒன்றும் இல்லாமல்
அசைவுற்றும் காணாமல்
தோட்டம்அற்ற வான்பொருளைத்
தேடுவது எக்காலம்?
முன்னை வினையால்
அறிவு முற்றாமல் பின்மறைந்தால்
அன்னை தனைத்தேடி அமுதுண்ப
தெக்காலம்?
கள்ளுண்டவர்போல் கனிதரும்
ஆனந்தம் அதால்
தள்ளுண்டு நின்றபடி தடைப்படுவ
தெக்காலம்?
நான்என்ற ஆணவமும் தத்துவமும்
கெட்டொழிந்தே
ஏன்என்ற பேச்சுமின்றி இலங்குவதும்
எக்காலம்?
நான்அவனாய்க் காண்பதெல்லாம்
ஞானவிழியால் அறிந்து
தான் அவனாய் நின்று சரண் அடைவ
தெக்காலம்?

Saturday, 25 January 2014

எனது சுவாசம் ..

உன்
பார்வையால் சுவாசம்
பெற்ற நான்
உன் வார்த்தையால்
உயிர் வாழ்கின்றேன்...

உனது வார்த்தை ,.

உன் ஒற்றை
வார்த்தைக்கு
உயிர் உண்டுஎனில்
அது மட்டுமே
என் சுவாசம்....

Friday, 24 January 2014

விவசாயின் ஏக்கம்

காத்திருக்கோம் காத்திருக்கோம் கண்ணாலா...
உன்ன கண்குளிர காணவேண்டி காத்திருக்கோம்...
நீ வந்து நனைக்கவில்லை..
கண்ணீரால நனையுதய்யா எங்க வாழ்க்கையில...
கறுத்திருக்கும் மேகத்தையும் காணலையே..
எங்க கேணியிலும் நீயில்லையே...
வறன்டு தானே போனதய்யா ஆறு குளம் ஏரியில..
நீயும் வந்து சேரவில்லேயே...
காத்திருந்தது போதும் உனக்காக ...
எங்க வாழ்க்கை வளம் சேர்க்க ...
வந்திடுமையா தன்னாலே..

விவசாயி