Thursday 30 January 2014

பத்ரகிரியார் பாடல்கள்

முத்திதரும் ஞானமொழியாம் புலம்பல்
சொல்
அத்தி முகவன்தான் அருள்பெறுவ
தெக்காலம்?
ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச்
சுட்டெரித்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவ
தெக்காலம்?
நீங்காச் சிவயோக
நித்திரை கொண்டே இருந்து
தேங்காக் கருணைவெள்ளம்
தேக்குவதும் எக்காலம்?
தேங்காக் கருணைவெள்ளம்
தேங்கியிருந் துண்பதற்கு
வாங்காமல் விட்டகுறை வந்தடுப்ப
தெக்காலம்?
ஓயாக் கவலையினால்
உள்ளுடைந்து வாடாமல்,
மாயாப் பிறவி மயக்கறுப்ப
தெக்காலம்?
மாயாப்
பிறவி மயக்கத்தை ஊடறுத்துக்
காயா புரிக்கோட்டை கைக்கொள்வ
தெக்காலம்?
சேயாய்ச்
சமைந்து செவிடூமை போல்திரிந்து
பேய்போல் இருந்துஉன் பிரமைகொள்வ
தெக்காலம்?
பேய்போல் திரிந்து, பிணம்போல்
கிடந்த பெண்ணைத்
தாய்போல் நினைத்துத் தவம்முடிப்ப
தெக்காலம்?
கால்காட்டிக் கைகாட்டிக் கண்கள்
முகம்காட்டி
மால்காட்டும்
மங்கையரை மறந்திருப்ப தெக்காலம்?
பெண்ணினல்லார் ஆசைப்
பிரமையினை விட்டொழித்துக்
கண்ணிரண்டும் மூடிக் கலந்திருப்ப
தெக்காலம்?
வெட்டுண்ட புண்போல் விரிந்த
அல்குல் பைதனிலே
தட்டுண்டு நிற்கை தவிர்வதும்
எக்காலம்?
தந்தை, தாய், மக்கள் சோதரரும்
பொய்யெனவே
சிந்தைதனில் கண்டு கிறுகிறுப்ப
தெக்காலம்?
வம்படிக்கும் மாதருடன் வாழ்ந்தாலும்
மன்னுபுளி
யம்பழமும் ஓடும்போல்
ஆவதினி எக்காலம்?
பற்றற்று நீரில்
படர்தா மரை இலைபோல்
சுற்றத்தை நீக்கிமனம் தூரநிற்ப
தெக்காலம்?
சல்லாப
லீலையிலே தன்மனைவி செய்தசுகம்
சொல்லாரக் கண்டெனக்குச்
சொல்வதினி எக்காலம்?
மரும அயல்புருடன் வரும்நேரம்
காணாமல்
உருகு மனம்போல் என்உள்ளம்
உருவதும் எக்காலம்?
தன்கணவன் தன்சுகத்தில்
தன்மனம்வே றானதுபோல்
என்கருத்தில் உன்பதத்தை ஏற்றுவதும்
எக்காலம்?
கூடிப் பிரிந்துவிட்ட
கொம்பனையே காணாமல்
தேடித் தவிப்பவள்போல் சிந்தவைப்ப
தெக்காலம்?
எவ்வனத்தின் மோகம் எப்படியுண்
டப்படிபோல்
கல்வனத் தியானம் கருத்துவைப்ப
தெக்காலம்?
கண்ணால் அருவி கசிந்து முத்துப்
போல் உதிரச்
சொன்ன பரம்பொருளைத்
தொகுத்தறிவ தெக்காலம்?
ஆக மிகவுருக, அன்புருக, என்புருகப்
போக அனுபூதி பொருத்துவதும்
எக்காலம்?
நீரில் குமிழ்ப்போல் நிலையற்ற
வாழ்வைவிட்டுன்
பேரில் கருணைவெள்ளம்
பெருக்கெடுப்ப தெக்காலம்?
அன்பைஉருக்கி, அறிவை அதன்
மேல்புகட்டித்
துன்ப வலைப்பாசத் தொடரறுப்ப
தெக்காலம்?
மனதைஒரு வில்லாக்கி,
வான்பொறியை நாணாக்கி
எனதறிவை அம்பாக்கி,
எய்வதினி எக்காலம்?
கடத்துகின்ற தோணிதனைக்
கழைகள்குத்தி விட்டாற்போல்
நடத்துகின்ற சித்திரத்தை நான்அறிவ
தெக்காலம்?
நின்றநிலை பேராமல்,
நினைவில்ஒன்றும் சாராமல்
சென்றநிலை முக்திஎன்று சேர்ந்தறிவ
தெக்காலம்?
பொன்னும் வெள்ளியும்பூண்ட
பொற்பதத்தை உள்அமைத்து
மின்னும் ஒளிவெளியே விட்டடைப்ப
தெக்காலம்?
அருணப்பிரகாசம் அண்டம் எங்கும்
போர்த்தது போல்
கருணைத் திருவடியில் கலந்துநிற்ப
தெக்காலம்?
பொன்னில் பலவிதமாம் பூடணம்உண்
டானதுபோல்
உன்னில் பிறந்து உன்னில்
ஓடுங்குவதும் எக்காலம்?
நாயில் கடைப்பிறப்பாம் நான்பிறந்த
துன்பம்அற
வேயில் கனல்ஒளிபோல்
விளங்குவதும் எக்காலம்?
சூரியனின்
காந்தஒளி சூழ்ந்துபஞ்சைச்
சுட்டதுபோல்
ஆரியநின் தோற்றத்து அருள்பெறுவ
தெக்காலம்?
இரும்பில் கனல்மூட்டி இவ்வுருபோய்
அவ்வுருவாய்க்
கரும்பில் சுவைரசத்தைக் கண்டறிவ
தெக்காலம்?
கருக்கொண்ட
முட்டைதனை கடல்ஆமை தான்நினைக்க
உருக்கொண்ட வாறதுபோல்
உனைஅடைவை தெக்காலம்?
வீடுவிட்டுப் பாய்ந்து வெளியில்
வருவார்போல்
கூடுவிட்டுப் பாயும் குறிப்பறிவ
தெக்காலம்?
கடைந்த வெண்ணெய்மோரில் கலவாத
வாறதுபோல்
உடைந்து தமியன்உனைக்
காண்பதுவும் எக்காலம்?
இருளை ஒளிவிழுங்கி ஏகஉருக்
கொண்டாற் போல்
அருளை விழுங்கும்இருள்
அகன்றுநிற்ப தெக்காலம்?
மின்எழுந்து மின்ஒடுங்கி விண்ணில்
உறைந்தாற்போல்
என்னுள்நின்று என்னுள்ளேயே யான்அறிவ
தெக்காலம்?
கண்டபுனல் குடத்தில் கதிர்ஒளிகள்
பாய்ந்தாற்போல்
கொண்ட சொரூபமதைக் கூர்ந்தறிவ
தெக்காலம்?
பூணுகின்ற பொன்அணிந்தால்
பொன்சுமக்கு மோஉடலைக்
காணுகின்ற என்கருத்தில் கண்டறிவ
தெக்காலம்?
செம்பில் களிம்புபோல்
சிவத்தை விழுங்கமிக
வெம்பிநின்ற
மும்மலத்தை வேறுசெய்வ
தெக்காலம்?
ஆவியும் காயமும்போல்
ஆத்துமத்து நின்றதனை
பாவி அறிந்துமனம் பற்றிநிற்ப
தெக்காலம்?
ஊமை கனாக்கண்டு உரைக்கறியா இன்பம்அதை
தாம்அறிந்து கொள்வதற்கு நாள்வருவ
தெக்காலம்?
எள்ளும் கரும்பும் எழுமலரும்
காயமும்போல்
உள்ளும் புறமும்நின்று உற்றறிவ
தெக்காலம்?
அன்னம்
புனலை வகுத்தமிழ்தை உண்பதுபோல்
என்னை வகுத்துன்னை இனிக்காண்ப
தெக்காலம்?
அந்தரத்தில் நீர்பூத்து அலந்தெழுந்த
தாமரைபோல்
சிந்தைவைத்துக் கண்டு தரிசிப்ப
தெக்காலம்?
பிறப்பும் இறப்பும் அற்றுப்
பேச்சும்அற்று மூச்சும்அற்று
மறப்பும் நினைப்புமற்று மாண்டிருப்ப
தெக்காலம்?
மன்னும் பரவெளியை மனவெளியில்
அடைத்தறிவை
என்னுள் ஒரு நினைவை எழுப்பிநிற்ப
தெக்காலம்?
தன்உயிரைக் கொண்டு தான்திரிந்த
வாறதுபோல்
உன்உயிரைக்
கொண்டு இங்கு ஒடுங்குவதும்
எக்காலம்?
சேற்றில் கிளைநாட்டும் திடமாம்
உடலைஇனிக்
காற்றில்உழல் சூத்திரமாய்க்
காண்பதினி எக்காலம்?
என்வசமும் கெட்டு இங்கிருந்த
வசம்அழிந்து
தன்வசமும் கெட்டுஅருளைச்
சார்ந்திருப்பது எக்காலம்?
தன்னை மறந்து தலத்து நிலைமறந்து
கன்மம் மறந்து கதிபெறுவ
தெக்காலம்?
என்னை என்னிலே மறைந்தே இருந்த
பதிமறந்து
தன்னைத் தானேமறந்து தனித்திருப்ப
தெக்காலம்?
தன்னையும்
தானேமறந்து தலைவாசல்
தாழ்போட்டே
உன்னை நினைத்துள்ளே உறங்குவதும்
எக்காலம்?
இணைபிரிந்த
போதில்அன்றி இன்பமுறும்
அன்றிலைப்போல்
துணைபிரிந்த போதுஅருள்நூல்
தொடர்ந்துகொள்வ
தெக்காலம்?
ஆட்டம்ஒன்றும் இல்லாமல்
அசைவுற்றும் காணாமல்
தோட்டம்அற்ற வான்பொருளைத்
தேடுவது எக்காலம்?
முன்னை வினையால்
அறிவு முற்றாமல் பின்மறைந்தால்
அன்னை தனைத்தேடி அமுதுண்ப
தெக்காலம்?
கள்ளுண்டவர்போல் கனிதரும்
ஆனந்தம் அதால்
தள்ளுண்டு நின்றபடி தடைப்படுவ
தெக்காலம்?
நான்என்ற ஆணவமும் தத்துவமும்
கெட்டொழிந்தே
ஏன்என்ற பேச்சுமின்றி இலங்குவதும்
எக்காலம்?
நான்அவனாய்க் காண்பதெல்லாம்
ஞானவிழியால் அறிந்து
தான் அவனாய் நின்று சரண் அடைவ
தெக்காலம்?

No comments:

Post a Comment