Wednesday 17 December 2014

தீபாராதனை

தீபாராதனை காட்டுவது ஏன்?

கோயில்களில் கற்பூர
தீபாராதனையும்,
நெய்விளக்கு தீபாராதனையும்
காட்டப்படுகின்றன. கற்பூரமும்
நெய்விளக்கும்
கடைசிவரை எரிந்து போகும்.
எதுவும் மிஞ்சாது.மனிதன் இறந்த
பிறகும் இதே நிலை தான். எஞ்சும்
சாம்பல் கூட தண்ணீரில்
கரைக்கப்பட்டு விடுகிறது. இந்த
தத்துவத்தை உணர்த்தவே கோயில்களில்
தீபாராதனை காட்டப்படுகிறது.
எனவே இந்த தத்துவத்தின்
படி எதுவுமே மிச்சமில்லாமல்
நம்மை இறைவனுக்கு அர்ப்பணிப்போம்.
இதர வகை வழிபாடுகளில்
பிரசாதமாக ஏதேனும் மிஞ்சும்.
ஆனால், கற்பூர வழிபாட்டில்
எதுவுமே மிஞ்சாது. நாமும்
கற்பூரத்தை போல்
நம்மை முழுவதுமாக
இறைவனுக்கு அர்ப்பணித்து
வழிபட்டால்
இறைவனது ஜோதி தரிசனம்
கிடைக்கும் என்பதையே கற்பூர
தீபாராதனை உணர்த்துகிறது.

1 comment:

  1. வணக்கம்
    சிறப்பான விளக்கம் பகிர்வுக்கு நன்றி
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பருவமாறிந்து பருவச்சிறகை விரித்தேன்.:

    கவிதையாக என்பக்கம் வாருங்கள் அன்புடன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete