Wednesday 17 December 2014

ஷீரடியில் சாய்பாபா சிலை உருவான விதம் ,,,

ஷீரடியில் உள்ள
சாய்பாபா சிலை உருவான விதம்
36 வருடங்களாக பாபாவின்
புகைப்படத்தை வைத்துதான் பூஜை செய்து
வந்தனர்.அப்பொழுது ஒரு நாள்
இத்தாலியில் இருந்து வெள்ளை பளிங்குக் கல்
ஒன்று பம்பாய்
துறைமுகத்திற்கு இறக்குமதி ஆனது.அது
அப்பொழுது எதற்கு வந்தது,ஏன்
வந்தது என்று யாருக்கும்
தெரியாது.அதை இறக்குமதி செய்தவரும்
அதை வாங்க வரவில்லை.உடனே துறைமுக அதிகாரிகள்
அதனை ஏலத்தில் விட
ஏற்பாடு செய்தனர்.இதை அறிந்த சாய்
சன்ஸ்தான் அதிகாரி அதை ஏலத்தில்
எடுத்து அதை பம்பாயில் உள்ள பாலாஜி வஸந்த்
தாலிம் என்னும் சிற்பியிடம் பாபாவின்
கருப்பு வெள்ளை புகைப்படத்தை அளித்து அதே மாதிரி
சிலை செய்ய கூறினார்.அந்தப் புகைப்படம்
தெளிவாக இல்லாததால் சிற்பி தாலிம்
மிகவும்
கஷ்டபட்டார்.அப்பொழுது பாபா அவர்
கனவில் தோன்றி அவருடைய முகத்தை பலவித
கோணங்களில் காட்டி சிற்பியின் கஷ்டத்தைப்
போக்கி அவரை உற்சாகப்படுத்தினார்.சிற்பி பின்னர்
தெளிவு பெற்று மிகவும் சிறப்பாக
எல்லோரும் எதிர்பார்த்தது போல் மிகவும் அழகாகச்
செய்து கொடுத்தார்.பின்னர் அந்த
சிலை 7ம் தேதி அக்டோபர் மாதம் 1954ம்
ஆண்டு பிரதிஷ்டை செய்தார்கள்.

நன்றி ,,,

http://www.shirdisaibabasayings.com

3 comments:

  1. வணக்கம்
    அறிய முடியாத தகவல் தங்களின் பதிவு வழி அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. சிறந்த தகவலுக்கு நன்றி...

    ReplyDelete