Tuesday 8 October 2013

சிவம்..

சிவனை லிங்கமாக அதாவது ஆவுடையராக தரிசிக்கின்றோம் ..
சிவம் என்றால் மங்களம். லிங்கம்
என்றால் அடையாளம். மங்கள
வடிவம் அது. மங்களம் என்றால்
சுபம்.
சிவத்தை அதாவது சுபத்தை மனதில்
இருத்தினால், சித்தம் சிவமாக
மாறிவிடும். பிறப்பின் குறிக்கோள்
அதுதான். பிறப்பின்
முழுமையை சிவத்தின்
சிந்தனை தந்துவிடுகிறது. நான்
உன்னை வணங்குகிறேன்
என்று சித்தத்தில்
சிவனை இருத்திவிடு என்று கூறுவதாகும் ...
மேலும பிறக்கும்போது எந்தப் பொருளும்
நம்முடன்
ஒட்டிக்கொண்டு வருவதில்லை;
இறக்கும்போதும் நம்முடன்
சேர்ந்து வருவதில்லை. வாழ்நாளில்
ஒட்டாத
பொருளை ஒட்டிக்கொண்டு கவலைப்படுகிறோம்!
பொருளை உன்னோடு ஒட்டிக்கொள்ளாதே.
விட்டுவிடு. என்னைப்பார்...
என்னில், எந்தப் பொருளும்
ஒட்டுவதில்லை என்று சொல்லாமல்
சொல்கிறது சிவலிங்கம்.
லிங்கத்தில் எதை அர்ப்பணித்தாலும்
ஒட்டிக்கொள்ளாது. அபிஷேகத்
தண்ணீர் தங்காது, அணிகலன்கள்
அணிய இயலாது; வஸ்திரம் உடுத்த
இயலாது. அங்க அடையாளங்கள்
தென்படாததால் அவன் உருவமற்றவன்
என்பதை உணர்த்தும்.
சிலைக்கு அதாவது கல்லுக்கு,
தட்பவெட்பத்தின் தாக்கம் தெரியாது;
அதாவது, அது உணராது. சுக
துக்கங்கள் தெரியாது.
சொல்லப்போனால் சுகமும் துக்கமும்
அதற்கு ஒன்றுதான்.
பனிப்பொழிவு என்றாலும் சரி, வெயில்
கொளுத்தினாலும் சரி...
அது அசையாது. சுக-
துக்கங்களை சமமாகப் பார்க்கச்
சொல்கிறது சிவலிங்கம்.
சிவலிங்கம், மௌனமாக
மனிதனுக்கு வழிகாட்டுகிறது.
அசையாத சிவலிங்கம்,
உலகை அசைய
வைத்து இயக்குகிறது. அவன்
அசையாமலே உலகம் அசையும்.
உடல். உடலுறுப்புகள், மனம்,
வாக்கு, செயல்பாடு, அத்தனையும்
இன்றி, எங்கும்
நிறைந்து உலகை இயக்கும்
உலகநாதனான பரம்பொருள் நான்தான்
என்று அடையாளம்
காட்டுகிறது சிவலிங்கம். உடல்
உறுப்புகள் இருந்தால்.. அவற்றின்
மூலம் ஆசாபாசங்களில் சிக்கித்
தவித்து, வெளிவர முடியாமல்
திண்டாடி, கிடைத்த
பிறவியை பயனற்றதாக்கும்
நிலை ஏற்படும்.
ஆசைகளை அறுத்தெறிந்தால், நம்
உடலுறுப்புகள்
சிவத்தோடு இணைந்துவிடும்; பிறவிப்
பயன் கிடைக்கும்
என்பதை வெளிப்படுத்துகிறது சிவலிங்கம்.
. எங்கும் எதிலும்
இருப்பது சிவம். அதுதான்
சிவலிங்கம். உருவமற்ற பொருள்
நமக்காக இறங்கி வந்து சிவலிங்க
உருவத்தோடு விளங்குகிறது.
எங்கும் சிவமயம் ..
எதிலும் சிவமயம்....
சிந்தையும் சிவமயம்..
செயலும் சிவமயம்..
காணும் பொருளேல்லாம் என்னையாளும் சிவமயம்..
ஓம் நமசிவாயா..

4 comments:

  1. அருமை...


    அன்புடன் அழைக்கிறேன் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-1.html

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா..

      Delete
  2. அருமையான தத்துவம்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா...

      Delete