Monday 5 January 2015

மீத்தேன் வாயுத் திட்டம்

எவ்வளவு நேரம்தான் புத்தகத்தையேப் படித்துக்கொண்டிருப்பது , ஒருமாறுதலுக்கு தொலைக்காட்சிப் பார்க்கலாம் என்றப்போது. ஒரு செய்திச்சேனலைப் பார்க்க நேர்ந்தது . அதில் மத்திய அரசின் திட்டத்திற்கு தமிழகத்தின் ஒரு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மட்டும் பல மாதங்களாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் . தற்போது அவர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் ஐந்துப்பேர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர் . விவசாயிகளுடன் இந்த மாணவர்களும் போராட்டம் நடத்துகின்றார்களே.,  அப்படி இத்திட்டத்தால் என்னா பாதிப்பு என்று தேடும் போது.

விரைவில் தமிழகத்தில் ஒருபகுதி மட்டுமல்ல இத்திட்டத்தால் விரைவில் தமிழகமே நிலத்தடி நீர் இன்றி பாலைவனமாக மாறிவிடப்போகிறது என்றுமட்டும் அறியலாம் , தயவுசெய்து சிலநிமிடங்கள் கண்டிப்பாக ஒதுக்கி படிக்கவும் . அப்படி நான்படித்ததால் தான் இதை அறியமுடிந்தது, அதனால்தான் கண்டிப்பாக நீங்களும் நேரத்தை ஒதுக்கி படிக்க வேண்டும் . பேராபத்தை உணரவேண்டும் என்றே விரும்பிக் கேட்கின்றேன் ,,,

முன்னால் பிரதமர் மன்மோகன்சிங் 'விவசாயிகள், விவசாயத்தைக்
கைவிட்டுவிட்டு வேறு வேலைகளுக்கு
செல்வதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்’
என்று சொன்னார். பொருளாதார
மேதையின் அந்த
வார்த்தைகளுக்கு ஆழமான பொருள்
இருக்கிறது என்பது இப்போதுதான்
புரிகிறது. மீத்தேன் வாயுத் திட்டம்
என்ற பெயரில், வளம் மிகுந்த
காவிரி டெல்டா படுகையை நரபலிக்காக
சுமார் 50 லட்சம் உழவர்களை காவிரிப்
படுகையில் இருந்து துரத்தியடித்து,
தெற்கே ஒரு தார்
பாலைவனத்தை உருவாக்கத்
துடிக்கிறது மத்திய அரசு.

கற்பனைக்கு அப்பாற்பட்ட பிரமாண்ட
பரப்பளவில் அறிவிக்கப்பட்டுள்ள மீத்தேன்
வாயுத் திட்டம், தமிழகத்தின்
நெற்களஞ்சியத்தைக் காவு வாங்கக்
காத்திருக்கிறது. தாழடி, குருவை,
சம்பா என்று பட்டம்
பார்த்து வெள்ளாமை செய்த உழவர்கள்,
இன்று இருக்கும் நிலம் பறிபோகுமோ,
ஊரைவிட்டுத்
துரத்தி அடிப்பார்களோ என்று பதைபத
கிடக்கிறார்கள். திட்டத்தின் ஆரம்பகட்ட
வேலைகள் தொடங்கப்பட்டுள்ள
நிலையில், டெல்டா பகுதி அடுத்த
சில ஆண்டுகளுக்கான போராட்டக்
களமாக மாறுவதற்கான
அனைத்து அறிகுறிகளும்
இப்போதே தென்படுகின்றன.

மீத்தேன் திட்டம் என்றால் என்ன?

மன்மோகன்சிங் மீத்தேன் வாயு திட்டத்தை பற்றி முதன்முதலாக அறிவிக்கும் போது அவர் கூறியதாவது, " இந்தியாவில் இயற்கை எரிவாயுவின் பயன்பாடு கடந்த ஆண்டை விட 18% அதிகரித்துள்ளது. அதனால் இந்தியாவில் மீத்தேன் எடுக்கப்பட வேண்டும் " என்று கூறினார்.
அதற்காக நடத்திய ஆய்வில் இந்த மீத்தேன் எரிவாயு தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் அதாவது காவிரி டெல்டா பகுதிகளில் பூமிக்கடியில் அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதற்காக நடத்திய ஏலத்தில் ஹரியானா மாநிலத்தில் இயங்கும்  Great Eastern Energy Corporation Limited என்ற வடமாநில தனியார் நிறுவனத்திற்கு தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் ஓப்பந்தத்தை மத்திய அரசு வழங்கியது.
ஆனால் பூமிக்கடியில் இருந்து மீத்தேன் எடுக்கும் முறையை பற்றி அறிந்தால் நமது இதயமே பதறும். அதை பற்றி சுருக்கமாக காணலாம்.
இந்த மீத்தேன் திட்டத்திற்காக 1,64,819 ஏக்கர் விவசாய நிலங்கள் பலியாக உள்ளன.
கீழே உள்ள செயல்முறைகள் பசுமை நிறைந்த வயல்களில் செய்யப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மீத்தேன் எடுக்கும் முறை:
மீத்தேன் வாயுவானது பூமிக்கடியில் ஆயிரக்கணக்கான அடிகளுக்கு கீழே பாறை இடுக்குகளில் சிக்கி நிறைந்துள்ளது.
இதை Hydraulic Fracturing என்று அழைக்கப்படும் ' நீரியல் விரிசல் ' முறையை பயன்படுத்துவார்கள்.
முதலில் செங்குத்தாக ஆயிரக்கணக்கான அடிகள் துளைகளை இடுவார்கள்.
பின்பு கிடைமட்டமாக பல கிலோமீட்டர்களுக்கு துளைகளை இடுவார்கள்.
பின்னர் நிலத்தடி நீர் முழுவதையும் வெளியேற்றி விடுவார்கள்.
பின்னர் அந்த துளைகளின் வழியே நீரையும் , 600 க்கும் அதிகமான நச்சுத்தன்மை உடைய வேதிப்பொருட்களையும் அதிக அழுத்தத்தில் செலுத்தி பாறைகளை வெடிக்கச் செய்து அடைபட்டுள்ள மீத்தேனை வேதிப்பொருட்களோடு வெளியே கொண்டு வருவார்கள்.
பின்னர் அந்த வேதிப்பொருட்களிலிருந்து மீத்தேனை மட்டும் தனியாக பிரித்து எடுப்பார்கள்.
மீதமுள்ள நச்சுத்தன்மை வாய்ந்த வேதிக்கழிவுகள் பூமியிலேயே கொட்டப்படும்.
இத்திட்டத்தால் பாகூர்
தொடங்கி ராஜமன்னார்குடி வரையிலு
உள்ள 1,64,819 ஏக்கர் நிலப்பரப்பில்
பரந்துவிரிய இருக்கும் திட்டம் இது.
இந்த நிலப்பரப்பின் கீழே சுமார் 6.25 லட்சம்
கோடி ரூபாய் மதிப்புள்ள மீத்தேன்
வாயு இருப்பதாக
தனது இணையதளத்தில்
குறிப்பிட்டுள்ளது கிரேட் ஈஸ்டர்ன்
நிறுவனம். இந்தத் தொகைக்காக
இவ்வளவு பிரமாண்டமான நிலப்பரப்பைப்
பலிகொடுக்கத் துணிவார்களா?
இல்லை. அவர்களுக்கு வேறுவிதமான
பிரமாண்ட நோக்கங்கள் இருக்கின்றன.
காவிரிப் படுகையின் கீழே மாபெரும்
நிலக்கரிச் சுரங்கத்தைக்
கண்டறிந்துள்ளனர். முதல் 35
ஆண்டுகளுக்கு மட்டும்தான் மீத்தேன்
வாயு. அதைத் தொடர்ந்து மீதம் உள்ள
ஆண்டுகளுக்கு நிலக்கரியைத்தான்
அகழ்ந்து எடுக்க இருக்கிறார்கள்.
இவை அனைத்தும் கிரேட் ஈஸ்டர்ன்
நிறுவனத்தின் இணையதளத்தில்
தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆனால், செய்திகளில் மீத்தேன்
மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகிறது ,.

இது ஏன் என்பதை நாம் கொஞ்சம் விரிவாகவே காணலாம்

''நிலக்கரிச் சுரங்கத்தின்
பாறை இடுக்குகளில் உள்ள மீத்தேன்
எரிவாயுவை எடுக்கவில்லை என்றால்,
தீ விபத்து ஏற்படுகிறது.
இது நிலக்கரி அகழ்வைத்
தாமதப்படுத்தி லாபத்தைக்
குறைக்கிறது. இதை நிறுவனங்கள்,
தங்கள் சொந்த அனுபவத்தில்
இருந்து உணர்ந்துள்ளன. ஆகவே,
உள்ளே இருக்கும் மீத்தேன்
எரிவாயுவை எடுத்தால்தான்
தங்கு தடையின்றி நிலக்கரியை எடுக்க
முடியும்.
இதில் என்ன பிரச்னையெனில், நாம்
வயல்களில் போர்வெல் அமைப்பது போல
மீத்தேன் எடுத்துவிட முடியாது.
அதற்கு பூமிக்கும் கீழ் உள்ள பாறைப்
பரப்பை உடைக்க வேண்டும். பூமியின்
உள்ளே கிலோமீட்டர் கணக்கில்
துளையிட்டு வேதிக்
கரைசல்களை உயர் அழுத்தத்தில்
செலுத்தி பாறைகளை உடைக்க
வேண்டும். இதற்கு 'நீரியல் விரிசல்
முறை’ (Hydraulic fracturing) என்று பெயர்.
இதற்கு முன்பாக அந்த இடத்தில்
நிலத்தடி நீரை முற்றிலும்
வெளியேற்றினால்தான்
திட்டத்தையே செயல்படுத்த முடியும்.
நிலத்தடி நீரை வெளியேற்றிவிட்டால்,
அப்புறம் என்ன இருக்கிறது? 35
ஆண்டுகள் இவர்கள் மீத்தேன்
எடுத்து முடிப்பதற்குள் இந்தப்
பகுதியின் நிலத்தடி நீர்வளம்
நாசமாக்கப்பட்டு பூமியின் கீழ் ரசாயனக்
கழிவுகள் செலுத்தப்பட்டு, பூமியின்
மேலே நிலம் நஞ்சாகிவிடும். மக்கள்
வேறு வழியே இல்லாமல் நிலங்களைப்
பாதி விலைக்கு விற்றுவிட்டு வெள
பிறகு, பெரிய எதிர்ப்புகள் எதுவும்
இல்லாமல் நிலக்கரிச் சுரங்கம்
தோண்டுவார்கள். இதுதான் அவர்களின்
திட்டம்!
உடனடித் திட்டம் மீத்தேன் என்பதால், அதன்
பெயரை மட்டும் வெளியில்
சொல்கின்றனர். நமக்கும்
இதை நிறுத்தினாலே அதையும்
நிறுத்தியது போலதான் என்பதால்
மீத்தேன் குறித்து , இந்த அரசும்
நிறுவனங்களும்
பிணந்தின்னி கழுகுகளைப் போல
காவிரிப் பாசனப் பகுதியில் இருக்கும்
மதிப்பிட முடியாத
பணமதிப்புக்கொண்ட நிலக்கரிக்காக
வலம்வந்துகொண்டிருக்கின்றன.
அவர்களின் நயவஞ்சகத்தையும், இந்தத்
திட்டத்தின் பிரமாண்டத்தையும் நாம்
புரிந்துகொள்ள வேண்டும்!''
சற்றே சிந்தித்து பாருங்கள். தமிழத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா பகுதிகளில் நிலத்தடி நீரை முற்றிலும் உறிஞ்சி எடுத்து விட்டால் ,
அழுத்தக்குறைவு காரணமாக கடல்நீர் நிலத்திற்குள் புகுந்துவிடும்.
நிலம் உள்வாங்கும்.
பசுமையான வயல்வெளிகள் பாலைவனமாக மாறும்.
மேலும் வேதிப்பொருட்களால் நிலம் நஞ்சாகும். சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிநீர் விஷமாகும்.
இதை போன்ற திட்டம் ஏற்கனவே பல நாடுகளை காவு வாங்கியது. தற்போது தமிழகத்திற்கும் வந்துள்ளது.
இவ்வளவு பெரிய ஆபத்தான திட்டத்தை அரசியல் அமைப்புகளும் ஊடகங்களும் மறைக்கின்றன. இதை மக்களுக்கு தெரியபடுத்தவேண்டியது நமது கடமை அல்லவா. நாம் அனுபவித்த இயற்கை வளங்களை நமது சந்ததிகளும் அனுபவிக்க வேண்டாமா...........

1 comment:

  1. வணக்கம்
    எல்லாம் அரசியல் மயமாகினால் எல்லாம் கிடைக்கையில் கிடக்கும்.. சொல்லிய விதம் நன்று
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete